டெங்கு நோயினால் 1,02,809 பேர் பாதிப்பு; 268 பேர் உயிரிழப்பு

Published By: Raam

24 Jul, 2017 | 08:49 AM
image

2017 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி வரை ஒரு இலட்­சத்து 2,809 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தோடு இந்­நோ­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட 268 பேர் இது­வ­ரையில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நோயா­ளர்­களின் தொகை­யா­னது கடந்த வருடம் முழு­வ­திலும் இனங்­காணப்­பட்ட டெங்கு நோயா­ளர்­களின் தொகையை காட்­டிலும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ரித்­துள்­ளமை தொடர்பில் சுகா­தார அமைச்சு வெளியிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்பட்டுள்ளதாவது, இந்த வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் ஒரு இலட்­சத்து 2,809 டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் இந்­நோ­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட 268 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மேல் ­மா­கா­ணத்­தி­லேயே அதி­க­ள­வான டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தில் 22,186 பேரும், கம்­பஹா மாவட்­டத்தில் 17,228 பேரும், களுத்­து­றையில் 5616 பேரும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளனர்.

அத்துடன் திரு­கோ­ண­ம­லையில் 4415 பேரும், மட்­ட­க்க­ளப்பு மாவட்­டத்தில் 4135 பேரும் யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 3255 பேரும், குரு­ணா­க­லில் 5943 பேரும், இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 6081 பேரும் மாவட்­ட­ளவில் பதி­வா­கி­யுள்­ளனர்.

அத்­துடன் கண்டி மாவட்­டத்தில் 6017 டெங்கு நோயா­ளர்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள நிலையில் கேகாலை மாவட்­டத்தில் 4949 பேரும், புத்­தளம் மாவட்­டத்தில் 2855 பேரும் பது­ளையில் 1701 பேரும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

கடந்த வரு­டம் 55,150 டெங்கு நோயா­ளர்­களே இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­தனர். எனினும் இவ்­வ­ரு­டத்தை பொறுத்­த­மட்டில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யி­லேயே அத்­தொகை இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது.

குறித்த டெங்கு நோயினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. டெங்கு ஒழிப்­புக்­கான ஜனா­தி­பதி செய­லணி மற்றும் டெங்கு ஒழிப்பு விசேட குழு­வி­னரின் ஊடாக இச்­செ­யற்­றிட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

இதன்­மூலம் நாட்டின் அரச, தனியார் நிறு­வ­னங்கள் மற்றும் பொது இடங்கள் என்­ப­ன­வற்றில் டெங்கு நுளம்­புகள் பெருகும் இடங்­களை கண்­ட­றிந்து அவற்றை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்­கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பாட­சா­லைகள், வணக்­கஸ்­த­லங்கள் மற்றும் பொதுப்போக்கு வரத்து தரிப்­பி­டங்கள் தொடர்­பிலும் கூடுதல் அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கி­ன்­றன. நாட்டில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களில் ஒரு மணித்­தி­யா­லம் தமது சூழலை சுத்­தப்­ப­டுத்த வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

டெங்கு நோய் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­மாறு சுகா­தார அமைச்சு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

அதற்­க­மைய மூன்று நாட்­க­ளுக்கு மேல் கடு­மை­யான காய்ச்சல் மற்றும் டெங்கு தொற்று ஏற்­ப­டு­வ­தற்­கான ஆரம்ப கட்ட அறி­கு­றிகள் காணப்­பட்டால் உட­ன­டி­யாக வைத்­திய ஆலோ­ச­னையை பெற்­றுக்­கொள்­ளு­மாறும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்­தி­ருப்­போ­ருக்கு எதி­ராக பொலிஸார், சுகா­தார சேவை­யா­ளர்கள் மற்றும் இரா­ணு­வத்­தி­னரின் ஒத்­து­ழைப்­புடன் சுகா­தார அமைச்சு விசேட சுற்­றி­வ­ளைப்­புக்­களை மேற்­கொண்­டு­வ­ரு­வ­துடன் அவ்­வாறு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்­தி­ருப்­போ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­ மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது எனவும் சுகா­தார அமைச்சு வெளியிட்­டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு  அவுஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10