கைது செய்ய சென்ற வெள்ளை வேன் ; விளக்கமளித்த பொலிஸ் அத்­தி­யட்சகர்

Published By: Raam

24 Jul, 2017 | 08:29 AM
image

அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் மருத்­துவ பீட ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான ரயன் ஜய­லத்தை கைது செய்ய பிடி­யாணை அவ­சி­ய­மில்லை எனவும் அவர் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் தேடப்­படும் சந்­தேக நபர் என்றும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்ச கர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார். நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

கடந்த 20ஆம் திகதி ரயன் ஜய­லத்தை கைது செய்ய சிவில் உடையில் வெள்ளை வேனில் பொலிஸார் சென்­றதால் ஏற்­பட்ட பர­ப­ரப்பு தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் போதே பொலிஸ்  அத்­தி­யட்சகர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி சுகா­தார அமைச்­சுக்குள் அத்து மீறி­யமை தொடர்பில் ரயன் ஜயலத் பொலி­ஸாரால் தேடப்­படும் சந்­தேக நப­ராவார். பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக மாளிகா கந்த நீதிவான் நீதி­மன்றில் அறிக்கை தாக்கல் செய்­யப்பட்­டுள்­ளது. இது தொ­டர்பில் மரு­தானை பொலி­ஸாரும் சி.சி.டி. எனப்­படும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவும் விசா­ர­ணை­களை செய்து வரு­கின்­றன.  இந் நிலையில் ரயன் ஜய­லத்தை கைது செய்ய ஏற்­க­னவே குற்றத் தடுப்புப் பிரி­வினர் அவ­ரது வீடு அமைந்­துள்ள வந்­து­ரம்ப பகு­திக்கு சென்­றி­ருந்­தனர். தொலை­பே­சியில் அழைத்து அவர் சந்­தேக நபர் என்­ப­தையும் கூறி­யி­ருந்­தனர்.

பிடி­யாணை இல்­லாது கைது செய்ய முடி­யு­மான குற்­றச்­சாட்டே ரயன் ஜயலத் மீது உள்­ளது. இத­னை­விட 3049/16 என்னும் வழக்கில் கோட்டை நீதி­மன்­றினால் அவ ­ருக்கு எதி­ராக பிடி­யா­ணையும் பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளது. அது மட்­டு­மல்­லாமல் கோட்டை நீதி­மன்றில் மேலும் நான்கு வழக்­கு­களும் அவ­ருக்கு எதி­ராக நிலு­வையில் உள்­ளன. ரயன் ஜய­லத்தை கைது செய்ய பொலிஸார் டபி­ள்யூ.பி. என்.ஏ.4010 எனும் வேனில் சென்றி­ருந்­தனர். இது பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மான வாகனமாகும். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவே அதனை பயன்­ப­டுத்­து­கின்­றது. கைது செய்ய சென்ற போது குற்றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி, வேனின் சாரதி உள்­ளிட்டோர் சீரு­டை­யி­லேயே இருந்­துள்­ளனர். சிலரே சிவில் உடையில் சென்­றுள்­ளனர்.

சிவில் உடையில் சென்று பொலி­ஸாரால் கைது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும். எனினும் கைது செய்ய சென்ற போது பொலிஸார் உரி­ய­வாறு செயற்­பட்­ட­னரா என்று ஆராய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர விசேட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்ளார்.  இது தொடர்பில் விசா­ரணை செய்து அறிக்கை சமர்­ப்பிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நத்­தன முனசிங்­க­வுக்கு  பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை  ஒரு வாரத்தில் கிடை க்கும். அதில் பரிந்துரைக்கப்படும் விட யங்களுக்கு அமைய, பொலிஸார் கட மையை நிறைவேற்றும் போது  தவறிழை த்திருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28