இலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும்

Published By: Raam

22 Jul, 2017 | 05:24 PM
image

காணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­னவை. அவை காலத்தின் தேவை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. வெறும் ஏடு­க­ளுக்குள் மட்­டுப்­பட்டு விடக்­கூ­டாது இலக்கை அடை­வ­தற்கு இலங்கை சவால்­க­ளுக்கு மத்­தியில் முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும் என ஐக்­கிய நாடு  கள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரி­வித்தார்.  நேற்று வெள்ளிக்­கி­ழமை'கேச­ரி'க்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இதனை தெரி­வித்தார். 

அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது; முன்னாள் ஐ.நா.செய­லாளர் நாயகம்  பான் கீ மூனுடன் இலங்­கைக்கு விஜ யம் செய்­தி­ருந்தேன். அப்­போது நாட் டில் தேர்தல் சூழல் காணப்­பட்­டது. எனவே, முழு­மை­யாக எத­னையும் அவ­தா­னிக்­கக்­கூ­டிய  சூழல் அன்று இருக்­க­வில்லை. எனினும் மக்­க­ளையும் பல்­வேறு சிவில் தரப்­புப்­க­ளையும் சந்­தித்­தி­ருந்தேன் . அதன்­போது உணர்­வு­பூர்­வ­மான ஏமாற்­றங்­களை சந்­திக்க நேரிட்­டது.  

தேர்தல் முடிந்த பின்னர் ஜனா­தி­பதி எதிர்­கால திட்­டங்­களை வெளி­யிட்­டி­ருந்தார். பல விட­யங்­களில் எதிர்­பார்ப்­புகள் அதி­க­மாக காணப்­பட்­டன. அதே­நேரம் இலங்­கையின் பிர­தி­நி­தி­களை சந்­தித்­த­போது அவர்கள் மத்­தியில் உணர்­வு­பூர்­வ­மான ஏமாற்­றங்­களை காணக்­கூ­டி­ய­தா­கவும் கேட்­கக்­கூ­டி­ய­தா­கவும் இருந்­தது. சில கவ­லைக்­கி­ட­மான விட­யங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. 

நிலை­யான நல்­லி­ணக்­கத்­திற்­கான முன்­னெ­டுப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. அதனை யாரும் மறுக்க முடி­யாது. இலங்­கையின் உறு­திப்­பாடு நல்­லி­ணக்­கத்தை அடைய வேண்டும் என்­பதில் அமைந்­துள்­ளது. எனவே அர­சாங்­கத்தின் தலை­வர்கள் தொடர்ந்தும் சிறந்த வகையில் நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய பாதையில் பய­ணிக்க வேண்டும்.

நிலை­யான அமைதி , நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட பொறி­மு­றை­களில் ஐக்­கிய நாடு­களை திருப்­திப்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வதை விடுத்து பொரு­ளா­தாரம் மற்றும் அர­சியல் உள்­ளிட்ட இலங்கை அனைத்து வகை­யிலும் முழு­மை­ய­டைய வேண்டும். இலக்கை அடை­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும்.

காணாமல் போன­வர்கள் தொடர்­பாக அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். அவை காலத்தின் தேவை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. அவை வெறும் ஏடு­க­ளுக்கு மட்­டுப்­பட்டு விட கூடாது. எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெற உள்ள ஐக்­கிய நாடு­களின் அமர்­வு­களில் இலங்கை தனது முன்­னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டியுள்ளது.

புதிய அரசியலமைப்பு விவகாரம் முக்கியமானதொன்றாகும். அனைத்து சமூகங்களும் உள்வாங்கப்பட்ட அரச நிர்வாக முறைமைக்கு அதுவே அடித்தளமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­னவை. அவை காலத்தின் தேவை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. வெறும் ஏடு­க­ளுக்குள் மட்­டுப்­பட்டு விடக்­கூ­டாது

இலக்கை அடை­வ­தற்கு இலங்கை சவால்­க­ளுக்கு மத்­தியில் முன்­னோக்கி பய­ணிக்க வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான துணைச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.

வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லே­யே அவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்டார்.

விபரம் வரு­மாறு;

கேள்வி: முன்­னைய விஜ­யத்தையும் தற்­போ­தைய நிலை­மையையும் எவ்­வாறு உணர்­கி­றீர்கள்?

பதில்: இலங்­கைக்­கான இந்த விஜ­யத்தில் பல்­வேறு விட­யங்­களை கருத்தில் கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ முனுடன் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தேன். அப்­போது நாட்டில் தேர்தல் சூழல் காணப்­பட்­டது. எனவே முழு­மை­யாக எதனையும் அவதானிக்க முடி­ய­வில்லை. எனினும் மக்களையும் பல்வேறு சிவில் தரப்­பு­க­ளையும் சந்­தித்­தி­ருந்தேன்.

உணர்­வு­பூர்­வ­மான ஏமாற்­றங்­களை சந்­திக்க நேரிட்­டது. தேர்தல் முடிந்த பின்னர் ஜனா­தி­பதி எதிர்­கால திட்­டங்­களை வெளி­யிட்டார். பல விட­யங்­களில் எதிர்­பார்ப்­புகள் அதி­க­மாக காணப்­பட்­டன. இலங்கை பிர­தி­நி­தி­களை சந்­தித்த­போது அவர்கள் மத்­தியில் உணர்­வு­பூர்­வ­மான ஏமாற்­றங்­களை கேட்க கூடி­ய­தாக இருந்­தது. சில கவ­லைக்­கி­ட­மான விட­யங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. இவற்றுள் வடக்கு மற்றும் கிழக்­கிற்கு எதி­ரான விட­யங்­களை குறிப்­பி­டலாம். இலங்கை ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் கடந்த 60 வரு­டங்­க­ளாக இணைந்­துள்­ளது. ஆனால் 2015 ஆம் ஆண்­டிற்கு முன்­ன­ரான குறிப்­பிட்ட காலப்­ப­கு­தியில் அந்த இணைப்பு பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்­தி­ருந்­தது.

ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­துடன் இணைந்து தற்­போ­தைய அர­சாங்கம் நிலை­யான சமா­தா­னத்தை நோக்­கிய நகர்­வு­களில் ஈடு­பட்­டுள்­ளது. உல­கத்­தோடு இலங்கை மிகப்­பெ­ரிய ஈடு­பாடு கொண்ட ஒரு சூழ்­நி­லையை தற்­போது காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இவ்­வா­றான நிலை­மையில் இலங்­கைக்கு வந்­துள்­ளமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. அனைத்து சமூங்­க­ளுக்கும் எதிர்­பார்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. சவால் மிக்­க­தாக இருந்­தாலும் அர­சாங்கம் முன்­னோக்கி செல்ல வேண்­டிய கட்­டாய தேவை காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி: இலங்கை விஜ­யத்தில் அமைந்­தி­ருந்த சந்­திப்­புகள் குறித்து?

பதில்: ஜனா­தி­பதி உள்­ளிட்ட அரச தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்­புகள் சிறப்­பாக அமைந்­தன. தற்­போ­தைய சூழலில் இலங்கை மீள் கட்­டு­மா­னத்தை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. நீண்ட கால மோதல்­களின் பின்னர் இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வது என்­பது எளி­தான விட­ய­மல்ல . ஆனால் அதனை சாதிக்­காது சிறந்த எதிர்­கா­லத்தை நோக்கி நகர்­வது சாத்­தி­ய­மற்­றது. எவ்­வா­றா­யினும் ஐக்­கிய நாடுகள் சபை இலங்­கையின் முன்­னோக்­கிய நகர்­வு­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும். எனது இந்த விஜ­யத்தின் நோக்­கமும் கடி­ன­மென்­றாலும் இலங்கை முன்­னோக்கி பய­ணிப்­ப­தற்கு தேவை­யான உந்­து­சக்­தியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தா­கவே அமை­கின்­றது.

மனித உரி­மைகள் மற்றும் பயங்­க­ர­வாத ஒழிப்பு தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்­கை­யாளர் இலங்கை விஜ­யத்தின் இறு­தியில் தெரி­வித்த விட­யங்கள் மற்றும் பரிந்­து­ரைகள் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­ய­வை­யாகும். எவ்­வா­றா­யினும் எனது விஜயம் அத­னுடன் சார்ந்­த­தல்ல. உள்­ள­டக்­கங்கள் குறித்து அவர் எதிர்­கா­லத்தில் தெளிவு­ப­டுத்­துவார். ஆனால் அவ­ரது பரிந்­து­ரைகள் தொடர்பில் அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ளும் என்று நினைக்­கின்றோம்.

சந்­திப்­பு­களின் போது பல்­வேறு நிலை­களில் கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டன. அவை ஆக்­க­பூர்­வ­மா­னவை. இலங்­கைக்கு உகந்­த­தன்மை, செழிப்பு, சமு­தா­யத்­துடன் இணக்­க­மான உறவு ஆகி­ய­வற்றை இலங்கை பெற்­றுக்­கொள்­வ­தற்கு தேவை­யான விட­யங்கள் சந்­திப்­பு­களில் பிர­தி­ப­லிக்­கப்­பட்­டன. இந்த புரிதல் அவ­சி­ய­மா­ன­தாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மிகவும் கடு­மை­யான நிலைப்­பாட்டை தெரி­வித்­தது. ஆட்சி முறைமை தொடர்­பி­லேயே அவர்­க­ளது கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அர­சியல் தீர்வு விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் குறிப்­பிட்­டனர். அவர்­களின் நிலைப்­பா­டு­களை கருத்தில் கொண்­டுள்ளோம்.

கேள்வி: உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு மற்றும் நல்­லி­ணக்கம் பற்றி நீங்கள் புரிந்­து­கொண்­டது என்ன?

பதில்: நிலை­யான நல்­லி­ணக்­கத்­திற்­கான முன்­னெ­டுப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. அதனை யாரும் மறுக்க முடி­யாது. இலங்­கையின் உறு­திப்­பாடு நல்­லி­ணக்­கத்தை அடைய வேண்டும் என்­பதில் அமைந்­துள்­ளது. எனவே அர­சாங்­கத்தின் தலை­வர்கள் தொடர்ந்தும் சிறந்த வகையில் நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய பாதையில் பய­ணிப்­பார்கள் என நம்­பு­கின்றோம்.

நிலை­யான அமைதி, நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் உள்­ளிட்ட பொறி­மு­றை­களில் ஐக்­கிய நாடு­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இலங்கை செயற்­பட வேண்­டி­ய­தில்லை. ஆனால் பொரு­ளா­தாரம் மற்றும் அர­சியல் உள்­ளிட்ட அனைத்து வகை­யிலும் இலங்கை முழு­மை­ய­டைய வேண்டும் என்றால் அர்த்­த­புஷ்­டி­யான முன்­னெ­டுப்­புக்கள் அவ­சி­யமாகும். அதனை நோக்கி பயணிக்க வேண்டும்.

காணாமல் போன­வர்கள் தொடர்­பாக அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். அவை காலத்தின் தேவை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. அவை வெறும் ஏடு­க­ளுக்கு மட்­டுப்­பட்டு விடக் கூடாது. எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெறவுள்ள ஐக்­கிய நாடு­களின் அமர்­வு­களில் இலங்கை தனது முன்­னேற்ற அறிக்­கை­களை சமர்­ப்பிக்க வேண்­டி­ய­துள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும். அனைத்து சமூ­கங்­களும் உள்­வாங்­கப்­பட்ட அரச நிர்­வாக முறைக்கு அதுவே அடித்­த­ள­மாக அமையும்.

கேள்வி: இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்­புக் கூறல் பற்றி உங்­க­ளது எண்ணப்­பாடு யாது?

பதில்: நீண்ட கால மோதல்­களின் பின்னர் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பல நாடுகள் சவால்­களை எதிர்­கொள்­கின்­றன. ஐக்­கிய நாடுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான துணைச் செய­லாளர் மோதல்கள் இடம்­பெற்ற பல நாடு­க­ளுக்கு சென்­றி­ருந்த போது இதனைக் காணக் கூடி­ய­தாக இருந்­தது. ஆனால் பொறுப்­புக்­கூறல் என்ற விடயம் காயங்­க­ளுக்கு மருந்து போடு­வ­தாக அமை­கின்­றது.

எனவே மோதல்கள் இடம்­பெற்ற நாடு­களில் பொறுப்­புக்­கூறல் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­பதன் முக்­கி­யத்­து­வம் கருத்தில் கொள்­ளப்­பட வேண்டும். அத­னூ­டா­கவே நிலை­யான சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான பொறி­மு­றைகள் சாத்­தி­யப்­படும். எனவே பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்­கையை ஊக்­கப்­ப­டுத்­தவே விரும்­பு­கின்றேன்.

இலங்­கைக்கு எது சிறந்­தது என்று யாரும் தீர்­மா­னித்து விட இய­லாது. ஆனால் உலகில் ஏனைய பல நாடுகள் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அனு­ப­வங்­களை பெற்­றுள்­ளன.

ஐக்­கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்ட தொடர் எதிர்­வரும் செப்­டெம்­ப­ரிலும் அடுத்த வருடம் மார்ச் மாத மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டரும் இடம்­பெற உள்­ளன. இவற்றில் அர­சாங்கம் முன்­னேற்­றங்­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். எவ்­வா­றா­யினும் அழுத்தம் கொடுக்­கப்­பட்ட பரிந்­து­ரைக்­கப்­பட்ட எந்­த­வொரு விட­யமும் ஐக்­கிய நாடுகள் சபையின் நலன்­களை சார்ந்­த­தல்ல. மாறாக இலங்­கையின் நிலை­யான அமை­திக்கும் மக்­களின் சுபிட்­சத்­திற்­கு­மா­ன­தா­கவே உள்­ளது.

கேள்வி: இலங்கை நிலைப்­பா­டு­களில் ஐ.நா.வின் நம்­ப­கத்­தன்மை எவ்­வா­றுள்­ளது?

பதில்: ஐ.நா. தெளி­வான நிலைப்­பாட்டில் உள்­ளது. மனித உரி­மைகள் ஆணை­யாளர் கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் தெளிவாக பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். இலங்கை போன்ற நாட்டில் இவை கடுமையான பிரச்சினைகளாக கருதப்படுகின்றன. ஆனால் அவை எளிதான விடயங்களாக இருந்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓரிரு வாரங்களில் முன்னெடுத்திருக்கும். இது எளிதானது அல்ல. அரசாங்கத்தில் காணப்படக் கூடிய பிளவுகள் முன்னகர்வுகளுக்கு தடையாகி விடக் கூடாது. அனைத்து வகைகளிலும் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். சவால்களை சமாளிக்க உதவும் வழிகளைக் கண்டுபிடித்து முன்னோக்கி நகர்த்த வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் நம்பகத்தன்மையை அரசாங்கம் எதிர்வரும் அமர்வுகளில் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. நீண்ட மோதலின் பின்னர் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து இலங்கை அறிந்துள்ளது. அவை நம்பகமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13