வலான குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது நடமாடும் விபச்சார நிலையமொன்று சிக்கியது.

பம்பலபிட்டி, காலி வீதி பாலத்திற்கு அருகிலேயே இந் நடமாடும் விபச்சார நிலையம் பம்பலபிட்டி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன் போது விபசாரத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் விபசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.