அமெ­ரிக்க விண்­வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலா­வுக்கு சென்றபோது அங்­குள்ள மண், கல் துகள்­களை சேக­ரிக்க பயன்­ப­டுத்­திய பை 1.8 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் (இலங்கை மதிப்பு 26 கோடி ரூபா) அள­வுக்கு ஏலம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மனி­தர்­களின் விண்­வெளி ஆராய்ச்­சியில் முக்­கிய மைல் கல்­லாக இருப்­பது, நிலாவில் மனி­தர்­களை கள­மி­றக்­கி­யது தான். 1969 ஆ-ம் ஆண்டில் அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி மைய­மான நாசா அப்­பலோ 11 என்ற விண்­க­லத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் ஒல்ட்ரின் ஆகிய இரு­வரை நிலா­வுக்கு அனுப்பி வைத்­தது.

நிலாவில் வெற்­றி­க­ர­மாக தரை­யி­றங்­கிய அப்­பலோ விண்­க­லத்­தி­லி­ருந்து, நிலாவில் முதலில் கால்­வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது பெயரை வர­லாற்றில் பொறித்­துக்­கொண்டார்.

அங்­குள்ள மண், கல் துகள்கள் ஆகி­ய­வற்றை ஒரு பையில் எடுத்­துக்­கொண்டு இரு­வரும் பூமிக்கு திரும்­பினர்.

பூமிக்கு விண்­கலம் வந்­ததும் அதி­லுள்ள பொருட்கள் அனைத் தும் ஸ்மித்­சோ­னியன் அருங்­காட்­சி­ய­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. பின்னர், நிலாவின் மண், கல்­களை சுமந்த அந்த பை பல­ரது கைக­ளுக்கு மாறி நியூ­யோர்க்கில் உள்ள தனியார் நிறு­வ­னத்தின் வசம் வந்­தது.

இந்­நி­லையில், அந்த வர­லாற்றுச் சிறப்புமிக்க பையா­னது நேற்று ஏலம் விடப்­பட்­டது. பெயர் வெளியே தெரி­யாத நபர் ஒருவர் 1.8 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மதிப்பில் ஏலத்­திற்கு பையை எடுத்­துள்ளார்.

அந்த பையில் இன்னும் மண் துகள்கள் இருந்ததற்கான அடை யாளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.