வெனி­சுலா ஜனா­தி­பதி நிகொலஸ் மது­ரோ­விற்கு  எதிர்ப்புத் தெரி­வித்து எதிர்க்­கட்­சி­யி­னரால் நாடெங்கும்  முன்­னெ­டுக்­கப்­பட்ட  பாரிய பொதுப் பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் மில்­லி­யன்க­ணக்­கானோர் பங்­கேற்­றனர்.

 இதன்­போது பொலி­ஸா­ருக்கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்­கு­மி­டையே இடம்­பெற்ற மோதலில் மூவர் பலி­யா­ன­துடன்  பலர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் 360   க்கும் அதி­க­மான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

 புதிய அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யொன்­றுக்­கான தேர்­தலை  இரத்துச் செய்ய வேண்டும் என  எதிர்க்­கட்­சி­யினர் நிகொலஸ் மதுரோவுக்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றனர். கடந்த ஏப்ரல் மாதம் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் தீவி­ர­ம­டைந்­தது முதற்­கொண்டு இது­வரை  சுமார் 100  பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

 தலை­நகர் கர­கஸ்­ஸிலும் ஏனைய நகர்­க­ளிலும் இடம்­பெற்ற மேற்­படி  பணிப்பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தின் போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அந்­ந­கர்­க­ளி­லுள்ள வீதி­களில் மறியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.

நாட்­டி­லுள்ள 85  சத­வீ­த­மா­ன­வர்கள் இந்தப் பணிப் பகிஷ்­கரிப்பு போராட்­டத்தில் இணை­ந்து கொண்­டுள்­ள­தாக எதிர்க்­கட்­சி­யினர் தெரி­விக்­கின்­றனர்.

 எனினும் தலை­ந­க­ரி­லுள்ள அர­சாங்க ஆத­ரவு பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள அலு­வ­ல­கங்­களும் தனியார் நிறு­வ­னங்­களும்  இந்தப் பணிப் பகிஷ்­க­ரிப்பால் பாதிக்­கப்­ப­டாது வழமை போன்று இயங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

 பல நகர்­களில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கலைக்க  பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிர­யோகம் செய்­துள்­ளனர். இது தொடர்பில் நிகொலஸ் மதுரோ கூறுகையில், முக்­கிய அர­சாங்கத்துறைகள் இந்தப் பணிப் பகிஷ்­க­ரிப்பில் இணைந்து கொள்­ள­வில்லை எனத் தெரி­வித்தார்.

 இந்­நி­லையில் கொலம்­பியா, ஸ்பெயின்,  பிரான்ஸ்,  அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் ஆகி­யன  எதிர்­வரும் 30  ஆம் திகதி இடம்­பெற நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள  புதிய அர­சியல் நிர்­ணய சபைக்­கான வாக்­கெ­டுப்பை வெனிசுலா  அர­சாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என  வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

ஆனால்  நிகொலஸ் மதுரோ மேற்­படி நாடு­களின் அழைப்­புக்கு மறுப்புத்  தெரி­வித்­துள்ளார்.

புதிய அர­சியல் நிர்­ணய சபையின் உரு­வாக்கம்  அர­சி­ய­ல­மைப்பை மீள  எழு­து­வ­தற்­கான அதி­கா­ரத்தை அர­சாங்­கத்­திற்கு வழங்­கு­வ­தாக உள்ள நிலையில்,  அதனைப் பயன்­ப­டுத்தி  நிகொலஸ் மதுரோ தனது அதி­கா­ரங்­களை அதி­க­ரிக்க எதிர்­பார்த்­துள்­ள­தாக எதிர்க்­கட்­சி­யினர் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.