முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் இணைந்து கூட்­ட­ணி­யாக எதிர்­வரும் தேர்­தல்­களில் கள­மி­றங்க வேண்டும். அல்­லாது போனால் தற்­போது முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­க­ளிலும் சிறு­பான்­மை­யாக மாற வேண்­டிய அபாயம் உள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹஸ­னலி தெரி­வித்தார்.

முஸ்லிம் கட்­சி­களை இணைத்து முஸ்லிம் கூட்­டணி அமைக்கும் வேலைத்­திட்டம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் இணைந்து கூட்­ட­ணி­யாக  செயற்­பட வேண்டும் என்­பதில் மக்கள் உறு­தி­யாக உள்­ளனர். எனவே எதிர்­நோக்கும் எந்­த­வொரு தேர்­த­லாக இருந்­தாலும் அதில் முஸ்லிம் கட்­சிகள் கூட்­ட­ணி­யாகக் கள­மி­றங்க வேண்டும். அல்­லாது போனால் தற்­போ­தைய அர­சியல் நில­வ­ரத்தில் முஸ்­லிம்­களின் பல்­வேறு அபி­லா­ஷை­களை வென்­றெ­டுக்க முடி­யாத துர்ப்­பாக்கியம் ஏற்­படும்.

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­ற­போ­திலும் அதற்கு உரிய தீர்வு முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக இல்லை. எனவே முஸ்­லிம்­களின் பலத்தை நிரூ­பிக்கும் வகையில் அர­சியல் ரீதியில் முஸ்லிம் அணி­யொன்றின் அவ­சியம் தேவை­யாக உள்­ளது. முஸ்லிம் கட்­சிகள் இணைந்து செயற்­ப­டா­மை­யி­னால்தான் அவர்­களின் வாக்கு வங்­கியைப் பயன்­ப­டுத்தி பெரிய கட்­சிகள் இலா­ப­ம­டை­கின்­றன. ஆக­வேதான் முஸ்லிம் கூட்­ட­மைப்பை அமைப்­ப­தற்­கான பணி­களை மேற்­கொண்டு வரு­கிறோம்.

மாவட்ட மட்­டத்தில் கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை தற்­போது முன்­னெ­டுத்து வரு­கிறோம். அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் மற்றும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகிய கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். அக்­கட்­சிகள் கொள்­கை­ய­ளவில் உடன்­பட்­டுக்கு வந்­துள்­ளன.

எனவே சகல முஸ்லிம் கட்­சி­களும் இக்கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும். அவ்வாறு செயற் பட்டால்தான் நாட்டில் நிலவும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு இயன்றளவு தீர்வுகாண முடியும் எனவும் அவர் மேலும் தெரி வித்தார்.