அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து போதைப்­பொ­ருள் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்றால் அதன் பின்­பு­லத்தில் மிகப்­பெ­ரிய அர­சியல் சக்தி உள்­ளது என்­பதே வெளிப்­ப­டை­யா­கின்­றது. எனவே அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி விலக்­கி­விட்டு ச.தொ.ச. நிறு­வ­னத்­திற்கு சீனி ஏற்றிச் சென்ற வாக­னத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட போதைப்­பொ­ருள் குறித்து விசா­ரணை நடத்­துங்கள் என சிங்கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் ராஜகிரிய அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து  பெருந்­தொகை போதைப்­பொ­ருள் மீட்­கப்­ப­டு­வ­தென்­பது பாரா­தூ­ர­மான விட­ய­மாகும். அதனால் இந்த விட­யத்தை மறைத்­து­வி­டாமல் இதன் பின்­பு­லத்தில் உள்­ள­வர்கள் யார் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

இன்று எமது நாடு போதை­ப்பொ­ருளை மற்­றைய நாடு­க­ளுக்கு பகிர்­ந்த­ளிக்­கின்ற ஒரு மத்­தி­யஸ்­தா­ன­மாக மாறி­யுள்­ளது. குறிப்­பாக சிலா­பத்­துறை, மன்னார் ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து கடல்­மார்க்­க­மா­கவே இந்த போதைப் பொருள் நாட்டின் உள்ளே வரு­கின்­றன.

இவ்­வ­ாறான செயற்­பா­டுகள் இடம்­பெறக் கூடும் என்­ப­தா­லேயே வில்­பத்து வனத்தை அழித்து அங்கு குடி­யி­ருப்­புக்­களை அமைக்க அனு­ம­திக்க வேண்டாம் என்று எமது அமைப்­புக்கள் கூறி­யி­ருந்­தன. இன்று பிரச்­சினை பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. இந்த குடி­யி­ருப்­புக்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஆயு­தக்­க­டத்­தல்­களும் கூட இடம்­பெ­றலாம் என்ற சந்­தேகம் எமக்கு உள்­ளது.

மேலும் இது­வ­ரையில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட போதை­ப்பொ­ருளுக்கு என்ன ஆனது என் றும் அர­சாங்கம் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.

எவ்­வா­றா­யினும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் உடைய அமைச்சின் கீழ் ச.தொ.ச. நிறு­வனம் இருக்கும் வரையில் இந்த விசா­ர­ணைகள் நியா­ய­மாக இடம்­பெ­றாது. எனவே அவரை உட­ன­டி­யாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதனை விடுத்து பிரேசிலிருந்து சீனி இறக்குமதி செய்வதை நிறுத்த வேண் டும் என்பது வேடிக்கையாகவுள்ளது. எனவே பிரேசிலிருந்து சீனி இறக்கு மதி செய்வதை தடுக்காமல் போதைப் பொருள் இறக் குமதி செய்யப்படுவதையே தடுக்க வேண்டும் என்றார்.