மன்னார் நானாட்டான் பிரதான வீதியில்  இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தின் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்  மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான றெக்ஸ் கமில்டன்(வயது-27) என தெரிய வருகின்றது.

மன்னார் நானாட்டான் பிரதான வீதியில்  இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில்  இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படு காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதன் போதே  நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான றெக்ஸ் கமில்டன்(வயது-27) என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

படுகாயமடைந்த மேலும் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.