பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் இன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 21  பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைபர் பக்துன்கவா  மாகாண அரசினால் நடத்தப்படும் குறித்த பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்கள் தாங்கிய 3 பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.