(ந.ஜெகதீஸ்)

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டால் எதிர்கால உலக மகா யுத்தங்களின் போது அமெரிக்காவின் மத்திய நிலையமாக இலங்கை செயற்பட வேண்டிய அபாயம் ஏற்படும் என முன்னிலை சோசலிஷ கட்சி தெரிவித்தது.

மருதானை சனசமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அச்சங்கத்தின் ஊடக பேச்சாளர் துமிந்த நாகமுவ இதனை தெரிவித்தார்.