17 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகச் சொல்லப்படும் 25 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் இரணவில பிரதேசத்தில் வசிக்கும் யுவதியே இவ்வாறு வல்லுறவுக்குட் படுத்தப்பட்டுள்ளதுடன் மாரவில தொடுவா பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

குறித்த யுவதி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட இளைஞரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிலாபம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.