இங்கிலாந்து மகா ராணி நாய்களின் மீது அதிகம் பற்று கொண்டவர். இவர் நாய்களின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னோடு மூன்றுக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார்.

இந் நாய்களோடு நடைபயிற்சி செய்வது ராணியின் வழக்கங்களுள் ஒன்று. இவ்வாறு ராணியோடு அவரின் நண்பரான முன்னாள் வியைளாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபடுவார். விஸ்பா என்ற நாயின் மீது ராணி அலாதி பிரியம் வைத்துள்ளார்.

திடீரென நண்பர் உடல் நலம் குன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் நாயை தன்னோடு வைத்து பராமரித்து வந்ததார் ராணி.

சிறிது நாட்களின் பின்னர் நண்பர் உயிரிழக்க ராணி “விஸ்பா” என்ற நண்பரின் நாயை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளார்.