தனுஷ் நடிகராக அறிமுகமாகி, தன்னடைய அயராத உழைப்பால் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமானவராக உயர்ந்தவர். இவரது உயரத்திற்கு கீரிடம் வைத்தாற்போல் அமைந்திருக்கிறது ஹொலிவூட் படம். ‘த எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் த பஃகீர் ’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தன்னுடைய தந்தையைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்று தேடுகிறான். அங்கு அவன் தன்னுடைய தந்தையை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை. இந்த கதையில் தனுஷ் உடன் ஹொலிவூட் நடிகைகளான எரின் மொரியார்ரி, உமா துர்மன் மற்றும் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அத்துடன் முன்னணி நடிகரான பக்தாத் அப்டீயும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். கனேடிய திரைக்கதையாசிரியர் , இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கென் ஸ்காட் இதனை இயக்கியிருக்கிறார்.  

அண்மையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பாரீஸில் முடிவடைந்தது. இதனைக் கொண்டாடும் வகையில் பாரீஸின் அடையாளமான ஈபின் டவர் மீதேறி அங்கிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய ட்வீட்டரில் போட்டிருக்கிறார். தனுஷ் தன்னுடைய நெருக்கமான நண்பர்களிடம் நனவான என்னுடைய ஹொலிவூட் கனவு என்றும் தெரிவித்திருக்கிறார். இப்படம் வெளியான பின் மீண்டும் ஹொலிவூட் படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாராம் தனுஷ். 

தகவல் : சென்னை அலுவலகம்