மனி­தனால் உற்­பத்தி செய்­யப்­பட்ட பிளாஸ்­டிக்கின் அளவு என்னவென உங்களுக்கு தெரியுமா.? இதோ

Published By: Robert

21 Jul, 2017 | 11:49 AM
image

மனி­தனால் உரு­வாக்­கப்­பட்டு சூழ­லுக்கு விடு­விக்­கப்­பட்ட பிளாஸ்­டிக்கின்  அளவு முதல் தட­வை­யாக கணிப்­பி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

 பிளாஸ்டிக் முதன் முத­லாக பெரு­ம­ளவில் உற்­பத்தி செய்­யப்­பட்ட 1950  ஆம் ஆண்­டி­லி­ருந்து 9.1  பில்­லியன்  தொன் பிளாஸ்டிக் மனி­தர்­களால் உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்­ளது.

  இது 90,000  ஈபில் கோபு­ரங்கள் அல்­லது 1.2  பில்­லியன் ஆபி­ரிக்க யானைகள் ஆகி­ய­வற்றின் நிறைக்கு சம­னா­ன­தாகும். அத்­துடன்  இந்த பிளாஸ்­டிக்கைப் பயன்­ப­டுத்தி  அமெ­ரிக்க மான்­ஹெட்டன் நகரை 2  மைல் உய­ரத்­துக்கு மூட முடியும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 மேற்­படி பிளாஸ்­டிக்கில் 9  சத­வீதம் மீள் சுழற்­சிக்கும் 12  சத­வீதம் எரித்­த­லுக்கும் உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.  

 இந்­நி­லையில் 5.6  பில்­லியன் தொன் பிளாஸ்­டிக்கால் உலகம் மாசாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க கலி­போர்­னிய பல்­க­லைக்­க­ழக  விஞ்­ஞா­னி­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த ஆய்வு கூறு­கி­றது.

 மேற்­படி பிளாஸ்டிக் உற்­பத்­தியைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் 2050  ஆம் ஆண்­டுக்குள் எமது சுற்­றுச்­சூ­ழ­லுக்கு சுமார் 12  பில்லியன் மெற்றிக் தொன் பிளாஸ்டிக்  விடுவிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17