மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சு.க.வின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராவார்

Published By: Raam

21 Jul, 2017 | 10:27 AM
image

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர். அதனை நிரா­க­ரிக்க அவ­ருக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை என மேல் ­மா­காண முத­ல­மைச்சர் இசறு தேவப்­பி­ரிய தெரி­வித்தார்.

மேல் மாகா­ண­சபை முத­ல­மைச்சர் அலு­வ­ல­கத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

மைத்­தி­ரி­பா­ல­ சி­றி­சேன ஜனா­தி­ப­தி­யைப்­போன்று ஜன­நா­யகம் மிக்க தலைவர் இதன் பிறகு நாட்­டுக்கு கிடைக்­குமா என்று தெரி­விக்­க­ மு­டி­யாது. 

அத­னால்தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அவரை கட்­சியின் தலை­வ­ராக ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­ கொண்­டது. அத்­துடன் அவர்­மீது வைத்­தி­ருக்கும் நம்­பிக்கை கார­ண­மா­கவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பெரும்­பான்­மை­யினர் அவ­ருடன் இணைந்­தி­ருக்­கின்­றனர்.

அத்­துடன் அடுத்­து­வ­ரக்­கூ­டிய 2020 ஜனா­தி­பதி தேர்­த­லிலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே போட்­டி­யி­டுவார். அது கட்சின் தீர்­மா­ன­மாகும். அதனை ஜனா­தி­பதி நிரா­க­ரிக்க முடி­யாது.

கேள்வி, ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டப்­ போ­வ­தில்லை என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ளாரே?

பதில்: பொது வேட்­பா­ள­ராக இருக்­கும்­போதே அவ்­வாறு தெரி­வித்தார். ஆனால் அவர் இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர். அதனால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முடி­யாது என அவ­ருக்கு தனித்து தீர்­மானம் எடுக்­க­மு­டி­யாது. 

கேள்வி: ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டால், அவர் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை மீறி­ய­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­வாரே?

பதில்: அவ்­வாறு இல்லை, ஜனா­தி­பதி பொது­வேட்­பா­ள­ராக இருக்­கும்­போதே அவ்­வாறு தெரி­வித்தார். அப்­போது அவ­ருக்கு எத­னையும் தெரி­விக்­க­மு­டியும். நான் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ராக இருக்­கும்­போது பல விட­யங்­க­ளையும் தெரி­விக்க முடியும். ஆனால் தற்­போது முத­ல­மைச்­ச­ராக இருக்கும் நிலையில் என்னால் தனித்து ஒரு­வி­ட­யத்தை தெரிவிக்க முடியாது. 

அதனால் பொதுவேட்பாளராக இருக்கும் போது தெரிவித்த விடயங்களை இப்போது சம்பந்தப்படுத்த முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றவகையில் கட்சிக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56