இலங்­கைக்கு பயணம் செய்­வது குறித்து கட்­டுப்­பா­டுகள் விதிக்கத் தேவை­யில்லை என உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­வித்­துள்­ளது. இலங்­கையில் பரவி வரும் டெங்கு நோய் கார­ண­மாக இவ்­வாறு பயண கட்­டுப்­பா­டு­களை விதிக்க வேண்­டிய எவ்­வித அவ­சி­யமும் தற்­போ­தைக்கு கிடை­யாது என அறி­வித்­துள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் முதல் ஜூலை மாதம் 7ஆம் திகதி வரையில் டெங்­கு­வினால் 215 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­து டன், 80 ஆயி­ரத்து 732 பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதி­க­ள­வான டெங்கு நோயா­ளிகள் மேல் மாகா­ணத்தில் பதி­வா­கி­யுள்­ளனர். 2010 இலி­ருந்து 2016 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இவ்­வ­ருடம் டெங்கு நோய் பதிவு 4.3 வீதத்­தினால் உயர்­வ­டைந்­துள்ளது.

இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 43 சத­வீ­த­மான டெங்கு நோயா­ளர்கள் மேல்­மா­கா­ணத்தில் பதி­வா­கி­யுள்­ளனர். இத­னைத் ­தொ­டர்ந்து கம்­பஹா (12,121 நோயா­ளர்கள்), குரு­ணாகல் (4889 நோயா­ளர்கள்), களுத்­துறை (4589 நோயா­ளர்கள்), மட்­டக்­க­ளப்பு (3946 நோயா­ளர்கள்), இரத்­தி­ன­புரி (3898 நோயா­ளர்கள்), கண்டி (3853 நோயா­ளர்கள்) ஆகிய மாவட்­டங்­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் பதி­வா­கி­யுள்­ளனர்.

மேலும்  டெங்­கு நோய் ஒழிப்பு நிகழ்ச்­சித்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­த ற்கு அவுஸ்­தி­ரே­லியா உலக சுகா­தார நிறு­வ­னத்­திற்கு 475,000 அவுஸ்­தி­ரே­லிய டொலர்­களை (ரூபா 58 மில்­லியன்) வழங்­கி­யுள்­ளது.

அத்­துடன் இலங்­கை­யி­லி­ருந்து டெங்கு நோயை ஒழிப்­ப­தற்கு இயற்­கை­யான வொல்­பே­சியா பக்­டீ­ரி­யாவை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான பரி­சோ­த­னையைச் செய்­வ­தற்கு அவுஸ்­தி­ரே­லிய மொனாஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும் இலங்கை சுகா­தார அமைச்­சுக்­கு­மி­டையில் ஒரு கூட்டு ஆய்வை மேற்­கொள்­வ­தற்கு அவுஸ்­தி­ரே­லியா ஒரு மில்­லியன் டொலர்­களை (ரூபா 116 மில்­லியன்) வழங்­கி­யுள்­ளது.