கூட்டு அரசாங்கத்தின் ஒரு தரப்பு நாட்டு வளங்களை விற்பதையே கொள்கையாக கொண்டுள்ளது

Published By: Raam

21 Jul, 2017 | 10:21 AM
image

கூட்டு அர­சாங்­கத்தில் தம்­முடன் கூடி ஆட்சி செய்யும் மற்­றைய தரப்பு நாட்டின் தேசிய வளங்­களை விற்­பனை செய்­வ­தையே கொள்­கை­யாக கொண்­டுள்­ள­தாக பெருந்­தெ­ருக்கள் இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

கொழும்பு துறை­முக அதி­கார சபையின் ஓய்­வு­பெற்ற ஊழி­யர்­க­ளுக்கு நினை­வுச்­சின்னம் வழங்கும் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

துறை­முக அமைச்­ச­ராக பொறுப்­பேற்­றுக்­கொண்­டதன் பின்னர் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க முது­கெ­லும்பு இருக்­கின்ற ஒருவர் என்ற வகையில் சரி­யான தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார். 

கொழும்புத் துறை­மு­கத்தின் கிழக்கு இறங்­கு­ து­றை­யினை விற்­பனை செய்­யாமல் அதனை தனி­யா­ருக்கு வழங்­காமல் இலங்கை துறை­முக அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் கீழ் தொடர்ச்­சி­யாக வைத்­துக்­கொண்டு அபி­வி­ருத்தி பணி­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னித்­துள்ளார்.

எமது கட்­சியின் அர­சாங்கம் ஒன்று இருக்­கின்ற போது எந்த பிரச்­சி­னையும் இல்லை. தீர்­மா­னங்­களை எடுப்­பதும் கடி­ன­மான விடயம் இல்லை. ஆனால் கூட்டு அர­சாங்­கத்தில் சரி­யான தீர்­மா­னங்­களை எடுப்­பது கடி­ன­மான ஒன்­றாகும்.

அமைச்சர் மேற்­கொண்­டுள்ள இந்த தீர்­மா­னத்தின் விளை­வாக துறை­மு­கத்தின் கிழக்கு இறங்­கு­து­றை­யினை காப்­பாற்­றிய பெரு­மையும் மகிழ்ச்­சியும் அதி­கா­ர­ச­பையின் தொழி­லா­ளர்­க­ளுக்கும் இருக்கும்.

குறிப்­பாக கூட்டு அர­சாங்கம் என்று கூறு­கையில் எம்­முடன் சேர்ந்து ஆட்சி செய்யும் மற்­றைய தரப்­புக்கள் நாட்டின் தேசிய வளங்­களை விற்பனை செய்வதையே கொள்கையாக கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கின்ற போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க எடுத்த தீர்மானம் வரவேற்புக் குரியது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55