இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் நகர்­வுகள் உள்­ள­தா­கவும் இலங்­கையின் பாது­காப்பு மற்றும் புல­னாய்வுத் துறையை உட­ன­டி­யாக முன்­னெச்­ச­ரிக்­கை­யாக செயற்­ப­டு­மாறும் அமெ­ரிக்க பாது­காப்பு அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள நிலையில் இலங்கையின் பாது­காப்பு மற்றும் புல­னாய்வு நகர்­வுகள் துல்­லி­ய­மாக கண்­கா­ணிக்கப்பட்டு வரு­வ­தாக இலங்கை பாது­காப்புத் தரப்பு தெரி­வித்­துள்­ளது. 

ஐக்­கிய  அமெ­ரிக்க பாது­காப்பு அறிக்கை யின் பிர­காரம் இலங்­கையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் நகர்­வுகள் உள்­ள­தா­கவும் இலங்­கையின் புல­னாய்வு மற்றும் பாது­காப்புப் படைகள் மிகவும் எச்­ச­ரிக்­கை­யுடன் செயற்­பட வேண்டும் எனவும் குறிப்­பிடப்பட்டுள்­ளது.  ஐக்­கிய அமெ­ரிக்­காவின் பாது­காப்பு தரப்பின் 2016 ஆண்­டுக்­கான பாது­காப்பு அறிக்­கையில் இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இந்­நி­லையில் இலங்கை பாது­காப்பு விட­யத்தில் முப்­ப­டை­களின் செயற்­பா­டுகள் துல்­லி­ய­மாக உள்­ள­தா­கவும் புல­னாய்வு பிரி­வினர் எச்­ச­ரிக்­கை­யுடன் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் இலங்கை பாது­காப்பு தரப்பினர் குறிப்­பிட்­டுள்­ளனர். இலங்­கை யில் இது­வ­ரையில் எந்­த­வித பயங்­க­ர­வாத நகர்­வுகளும் இடம்­பெ­ற­வில்லை எனவும் சர்­வ­தேச நாடு­களின் மூல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இலங்­கையில் செயற்­ப­ட­வில்லை எனவும் குறிப்­பிட்­டுள்­ளனர். தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த அர­சாங்கம் பாது­காப்பு தரப்­புடன் இணைந்து செயற்­பட்டு வரு­வ­தா­கவும், கடல் மற்றும் ஆகாய மார்க்­க­மாக பாது­காப்புக் கண்­கா­ணிப்­பு கள் இடம்­பெ­று­வ­தா­கவும், பாது­காப்பு அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. 

எனினும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ரச்சி கடந்த ஆண்டு குறிப்­பிட்ட தக­வலில் 36 இலங்­கை­யர்கள் இலங்­கையில் இருந்து சிரி­யா­விற்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் ஐ.எஸ். பயங்­க­ர­வாத குழுவில் இவர்கள் இணைந்­துள்­ளனர் எனவும் குறிப்­பிட்­டி­ருந்தார். அதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்   ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை யில் இலங்கையை சேர்ந்த நன்கு கற்ற 32 முஸ்லிம் நபர்கள் ஐ.எஸ். பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளனர் என்ற தக வலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.