புதிய அர­சியல் அமைப்பில் அதி­கார பகிர்வு தொடர்பில் இது­வ­ரையில் எந்­த­வித தீர்­மா­னங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஐக்­கியம், பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை என்ற விட­யத்தில் எந்­த­வித விவா­தத்­திற்கும் இட­மில்லை என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். 

புதிய அர­சியல் அமைப்பே தீர்­வாகும் எக்­கா­ரணம் கொண்டும் புதிய அர­சியல் அமைப்பை தடுக்­கக்­கூ­டாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

நாட்டில் இது­வரை காலம் நடை­மு­றையில் இருக்கும் அர­சியல் அமைப்பு 19 தட­வைகள் திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­தனை திருத்­தங்­களை செய்தும் நாட்டின் பிரச்­சி­னை­க­ளுக்கு உறு­தி­யான தீர்­மானம் ஒன்றை முன்­னெ­டுக்க முடி­யாது உள்­ளது. புதிய சமூகம் ஒன்றை நோக்கிய நகர்­வு­களின் போது நாமும் அதற்கு ஏற்றவகை­யி­லான நகர்­வு­களில் செல்ல வேண்டும். 

ஆனால் இப்­போது உள்ள அர­சியல் அமைப்பின் மூலம் சமூக ஒரு­மைப்­பாட்­டையோ தீர்­வு­க­ளையோ பெற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே இந்த அர­சியல் அமைப்பு நமது நாட்­டிற்கு பொருத்­த­மா­னது அல்ல. புரட்­சிகள், போர்கள் முடி­வ­டைந்த பின்னர்  முத­லா­வது செயற்­பா­டாக அர­சியல் அமைப்பு மாற்­றத்தை செய்ய வேண்டும். அதற்கு நல்ல உதா­ர­ண­மாக ரஷ்யா, சீனா மற்றும் இப்­போது கியூபா அதற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றமை என்­ப­வற்றை குறிப்­பிட முடியும். 

ஆகவே இலங்­கை­யிலும் இப்­போது புதிய அர­சியல் அமைப்பு ஒன்றே அவசி­யமாகும். 1978 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பில் இறுதி இரண்டு திருத்­தங்­களை விடவும் ஏனைய 17 திருத்­தங்­களும் ஜனா­தி­ப­தியின் தனிப்­பட்ட மற்றும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும் கருத்தில் கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இத னால் மக்­க­ளுக்கு எந்த நன்­மை­களும் கிடைக்­க­வில்லை. 

ஆகவே புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வதில் எந்த மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. எனினும் புதிய அர­சியல் அமைப்பில் பிர­தான மூன்று விட­யங்­களை கருத்தில் கொண்டு கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது, தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ருதல் மற்றும் அதி­கார பகிர்வு ஆகிய விட­யங்­களில் மாற்­றங்­களை கொண்­டு­வர வேண்டும் என்ற நிலை­ப்பாட்டில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களின் கருத்­தாக அமைந்­துள்­ளது. 

இதில் புதிய தேர்தல் முறை­மையை உரு­வாக்­கு­வதில் 80 வீத­மான வேலைப்­பா­டுகள் நிறை­வுக்கு வந்­துள்­ளன. ஒரு சில விட­யங்­களில் மாத்­திரம் மாற்­றங்­களை கொண்­டு­வ­ரு­வதில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது தொடர்பில் ஒரு சில கட்­சி­களை தவிர ஏனைய அனை­த்தும் ஒரு­மித்த நிலைப்­பாட்டில் உள்­ளன. பிர­தான கட்­சிகள் இது தொடர்பில் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றது. 

எனினும் அதி­காரப் பகிர்வு விட­யத்தில் இது­வ­ரையில் எந்­த­வித தீர்­மா­னங்­க­ளை யும் எடுக்­க­வில்லை. இப்­போதும் அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்பில் ஆழ­மான கலந்­து­ரை­யாடல் மட்­டுமே இடம்­பெற்று வரு­ கின்­றது. மாகாண இணைப்­புகள், அதி­யுச்ச அதி­கார பகிர்வு என்ற கருத்­துக்கள் எதையும் இது­வ­ரையில் எவரும் முன்­வைக்­க­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கூட ஐக்­கிய இலங்கை என்ற நிலைப்­பாட்டில் இருந்தே கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர். 

எனவே புதிய அர­சியல் அமைப்பு நாட்டின் ஐக்­கி­யத்­திற்கு எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. மேலும் புதிய அரசியல் அமைப்பில் பெளத்த மதத்திற்கான முன் னுரிமை, மற்றும் ஐக்கியம் என்ற பதம் என்ற விடயங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்பட வேண்டிய காரணி கள் அல்ல. இவை விவாதம் இன்றி முன் னெடுக்க வேண்டிய காரணிகளாகும். அதைத் தவிர்ந்து ஏனைய காரணிகளில் கலந்துரையாட வேண்டும். எனினும் புதிய அரசியல் அமைப்பே தீர்வாகும் என்றார்.