இலங்­கையின் வட பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கண்­ணி­வெ­டி­களை அகற்றும் பணி­க­ளுக்­காக ஜப்பான் மேலும் 91 மில்­லியன் ரூபாவை வழங்­கி­யுள்­ளது. போரில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களின் மீள்­கட்­டு­மா­னங்கள் மற்றும் மீள்­கு­டி­யேற்றம் போன்ற  நட­வ­டிக்­கை­க­ளிலும் தற்­போ­தைய நல்­லி­ணக்க பொறி­மு­றை­களில் இலங்­கைக்கு அனைத்து வகை­யிலும் ஜப்பான் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கும் என இலங்­கைக்­கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னுமா தெரி­வித்தார். 

இலங்­கையில் செயற்­படும் சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­ன­மான கண்­ணி­வெடி ஆலோ­சணை குழு­விற்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் வடக்கில் கண்­ணி­வெ­டி­களை அகற்­று­வ­தற்­கான நிதி ஒத்­து­ழைப்பு  தொடர்­பான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை ஜப்பான் தூத­ர­கத்தில் இடம்­பெற்­றது. 

இதில் உரை­யாற்றும் போதே  இலங்­கை க்­கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னுமா  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொட ர்ந்தும் கூறு­கையில்,

ஜப்பான் நிதி உத­வி­யுடன் கண்­ணி­வெடி ஆலோ­சணை குழு­வி­னரால் தற்­போது வடக்கில் அந்த பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. வடக்கில் போரினால் இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்­து­வதில் கண்­ணி­வெ­டிகள் சவால்கள் பாரி­ய­ளவில் காணப்­ப­டு­கின்­றன. 

இந்­நி­லையில் அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழை ப்­பு­களை வழங்கும் நோக்­கிலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தாரம் மற்றும் மீள்­கு­டி­யேற்றம் உள்­ளிட்ட மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­களை கவ­னத்தில் கொண்டும் ஜப்பான் இந்த உத­வி­களை செய்து வரு­கின்­றது. 2003 ஆம் ஆண்டில் இருந்து  இது வரையில் வடக்கு மற்றும் கிழக்கில் கண்­ணி­வெ­டி­களை அகற்றும் பணிக்­காக 30. அமெ­ரிக்க டொலர்­களை ஜப்பான் இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது. 

போரில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் அந்த மக்­களின் விவ­ சாய நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிப்­ப­தற்­காக ஜப்பான் அர­சாங்கம் கண்­ணி­வெடி ஆலோ ­சணை குழு­வுடன் ஒப்­பந்தம் செய்­துள்­ளது. இந்த நிறு­வ­ன­மா­னது கண்­ணி­வெ­டி­களை அகற்றல் உள்­ளிட்ட மோதல்­களில் பாதிக்­கப்­பட்ட நாடு­களில் மீள் கட்­டு­மான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­வ­தற்­கான சிறந்த சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­ன­மாகும். 

கடந்த இரண்டு ஆண்­டு­களில் மாத்­திரம் 10 ஆயிரம் கண்­ணி­வெ­டிகள் அப்­பு­றப்­ப­டுத்­தப்பட்டுள்­ளன. இந்த நட­வ­டிக்­கைகள் கார­ண ­மாக மன்­னாரில் மக்கள் பாது­காப்­பாக மீள்­கு­டி­யேற்­றவும் அவர்­களின் விவ­சாய நிலங்­களை பயன்­ப­டுத்­தவும் முடிந்­துள்­ளது. இந்­நி­லையில் வடக்கு மற்றும் கிழக்கில் கண்­ணி­வெடி அச்­சு­றுத்தல் மிக்க மாவட்­டங்கள் 6 காணப்­ப­டு­கின்­றன. இந்த மாவட்­டங்­களில் கண்­ணி­வெடி ஆலோ­சணை குழு செயற்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் தற்­போதும் கூடுதல் கண்­ணி­வெ­டிகள் அச்­சுறுத்தல் மிக்க  முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அடுத்த கட்ட பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

எவ்வாறாயினும் ஜப்பான் அரசு இலங் கையின் அபிவிருத்திகளிலும் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டு மானம் தொடர்பிலும் கூடிய ஈடுபாடுடன் செயற்படுகின்றது. புதிய இலங்கையில் நல்லிணக்கத்திற்கான பணிகளிலும் ஜப் பான் தேவையான ஒத்துழைப்புகளை வழங் கும் என அவர் குறிப்பிட்டார்.