அர­சாங்கம் இவ்­வ­ரு­டத்தில் எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்­து­வ­தற்கு தயார் இல்லை. எனவே தேர்தல் நடை­பெ­று­வ­தாயின் அடுத்த வரு­டத்­தில்தான் நடை­பெ­றலாம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பகல் பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போட்டு வந்­தது. தற்­போது அர­சாங்கம் தேர்­தலை நடத்­து­வதை சுயா­தீன தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் பொறுப்­பாக்­கி­யுள்­ளது. 

எனினும் தேர்தல் முகா­மைத்­துவ நட­வ­டிக்­கைகள் தொடர்பில் இன்னும் சில திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ள­தாக ஆளுங்­கட்சி தெரி­வித்­துள்­ளது. குறி த்த திருத்­தங்­க­ளுக்கு கூட்டு எதிர்க்­கட்சி எதிர்ப்புத் தெரி­விக்­கப்­போ­வ­தில்­லைெ­ய­னவும் அதற்கு உட­ன­டி­யாக காலம் ஒதுக்­கு­மாறும் நாம் பாரா­ளு­மன்றில் கேட்­டுக்­கொண்டோம். எனினும் அதற்கும் இட­ம­ளிக்­க­வில்லை. ஆகவே இவ்­வ­ரு­டத்தில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயா­ரில்லை.

நவம்பர் மாதம் இறு­திப்­ப­கு­தி­யி­லி­ருந்து டிசம்­பர் மாதம் முழு­வ­து­மாக தேர்­தலை நடத்த முடி­யாது என சுயாதீன தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார். ஏனெனில் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்சை நடை­பெ­ற­ வுள்­ளது. எனவே அக்­கா­லப்­பி­ரிவில் தேர்­தலை நடத்த முடி­யாது. 

எனவே இவ்­வ­ரு­டத்தில் தேர்தல் நடை­பெ­றப்­போ­வ­தில்லை என்­பதை இதன் மூலம் புரிந்­து­கொள்ள முடி­கி­றது. அத்­துடன் கிழக்கு,வட­மத்­திய மற்றும் ஊவா மாகாண சபை­களின் பத­விக்­காலம் விரைவில் நிறை­வ­டை­ய­வுள்­ளது. எனினும் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடத்தாது காலம் தாழ்த்துவதனை அடிப் படையாகக்கொண்டு அரசாங்கம் புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.