அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் இம்­மாத  இறு­தியில் சீனா­விற்கு 85 வீதம் இலங்­கைக்கு 15 வீதம் என்ற அடிப்­ப­டையில் கைச்சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தென துறைமு­கங்கள் மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

அதே­நேரம் இந்­தி­யாவின்  உத­வி­யுடன் காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்தி பணி­க­ளையும் முன்­னெ­டுக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இலங்கை துறை­முக அதி­கார சபைக்கு 38 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கு­வதை முன்­னிட்டு ஓய்வுப் பெற்ற ஊழி­யர்­க­ளிற்கு நினை­வுச்­சின்­னங்­களை வழங்கி வைக்கும் நிகழ்­வினை துறை­மு­கங்கள் மற்றும் சமுத்­தி­ர­வியல் பயிற்­சி­நி­லை­யத்தில்  ஊழி­யர்கள் சங்கம் நேற்று நடத்­தி­யது.  இந்­நி­கழ்வில் கலந்து ­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நான் அமைச்சு பத­வியை பொறுப்­பேற்கும் முன்பே பிரச்­சி­னையை பெரிதும் ஆராய்ந்து பார்த்­துள்ளேன். அதன்­போது கொழும்பு துறை­மு­கத்தின் கிழக்கு இறங்­கு­து­றையை தனி­யா­ருக்கு வழங்க எடுத்த முடிவு மிகத்­த­வ­றா­னது என அறிய முடிந்­தது.

எனவே அந்த இறங்­கு­துறை 100 வீதம் இலங்கை துறை­முக அதி­கா­ர­சபையின் கீழி­ருக்க வேண்டும் என்று தீர்­மா­னித்­துள்ளேன்.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அந்த தீர்­மா­னத்­தி­லேயே இருக்­கின்றார்.

அதே­நேரம் அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்த விவ­கா­ரத்தை ஆராய்ந்து பார்த்­ததில் 2014 ஆம் ஆண்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­களை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்தால் இந்த துறை­மு­கத்தை இன்று வலு­வான பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என்­ப­தையும் அறிய முடிந்­தது.

எனவே அம்­பாந்­தோட்டை ஒப்­பந்தத்தில் 85 வீதத்­தினை சீனா­விற்கும் 15 வீதத்­தினை இலங்­கைக்கும் வழங்கும் வகை­யி­லான ஒப்­பந்தத்தில் இம்­மாத இறு­தியில் கைச்சாத்­தி­ட­வுள்ளோம். மறு­மு­னையில் கொழும்பு துறை­மு­கத்தின் கிழக்கு இறங்கு துறை­யி­னையும் குறித்த நிறு­வ­னத்­திற்கு மேற்­கு­றித்த சத­வீத அடிப்­ப­டை­யி­லேயே வழங்­க­வுள்ளோம். காரணம் இன்று உலக நாடு­களின் கம்­ப­னிகள் இலாப நோக்கில் கூட்டு வியா­பார செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக பாரிய அள­வி­லான கப்­பல்­களை பயன்­ப­டுத்­து­கின்­றன. அவ்­வா­றான கப்­பல்­களை நங்­கூ­ர­மிட துறை­முக அதிகார சபைக்கு சொந்­த­மான இறங்­கு­து­றை­களில் இட வசதி போதாமல் உள்­ளது.  எனவே கிழக்கு இறங்­கு­து­றையின்  அபி­வி­ருத்தி பணி­களும் வரு­கின்ற இரு மாதங்­களில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. அதற்­கான  இயந்­தி­ரங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரமும் பெறப்­பட்­டுள்­ளது.

அதேபோல் இன்று ஒலுவில் துறை­மு­கத்தை மேற்­பார்வை செய்­ய­வுள்ளேன். எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­திற்கும் செல்­ல­வுள்ளேன். அதன் போது ஒழுவில் துறை­முக விவ­காரம் குறித்து பெரிதும் அவ­தானம் செலுத்­து­கின்ற அதே­நேரம் திரு­மலை துறை­முக அபி­வி­ருத்தி குறித்தும் ஆரா­ய­வுள்ளேன்.

மேலும் காலி துறை­மு­கத்­தினை பார்­வை­யி­டவும் எதிர்­பார்த்­துள்ள நிலையில் அதன் பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தை மேற்பார்வை செய்யவுள்ளேன். காங்கேசன் துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு இந்

தியா 42 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கவுள்ளது.  இந்தச் செயற்பாடுக ளையடுத்து துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினரின் சேவைக்காலத்தையும் 60 வயது வரையில் நீடிப்பதற்கான அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது என்றார்.