வெற்­றி­க­ர­மாக அமைந்த பங்­க­ளாதேஷ் விஜயம்

Published By: Raam

21 Jul, 2017 | 09:11 AM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் பங்­க­ளா­தே­ஷுக்கு மேற்­கொண்ட உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மா­னது  மிகவும் வெற்­றி­க­ர­மாக அமைந்­தது. இதன்­போது  14 உடன்­ப­டிக்­கைகள் இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் செய்­து­கொள்­ளப்­பட்­டன என்று வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். 

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று நடை­பெற்ற    விசேட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.  

அமைச்சர்  அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில்:

பங்­க­ளாதேஷ் நாட்டின்  அழைப்பின் பேரில்   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அந்­நாட்­டுக்கு  உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டார். இது பயன்­தரும் விஜ­ய­மாக அமைந்­தது.   இந்த விஜ­யத்­தின்­போது இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில்  14 உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன.  

சேவைத்­துறை, கல்­வித்­துறை உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில்   உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. மேலும் இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில்  முத­லீ­டு­களை அதி­க­ரித்­துக்­கொள்­வ­தற்கும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன. 

இந்த விஜயம்  தொடர்­பாக   பல்­வேறு தவ­றான கருத்­துக்கள்  ஊட­கங்­களில் வெளி­வந்­தன. இலங்கை வர்த்­தக சபையின் பிர­தி­நி­திகள்  இந்த  விஜ­யத்தில் பங்­கேற்­றனர். அதற்­காக அர­சாங்கம் நிதி  செல­வி­ட­வில்லை. எனினும்  பல தவ­றான தக­வல்கள் வெளி­வந்­தன. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணைந்து அமைத்துள்ள   கூட்டணி ஆட்சி தொடர்பில் பங்களாதேஷில்  சிறந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  அந்தவகையில்  மிகவும்  வெற்றிகரமான ஒரு  விஜயம்  மேற்கொள்ளப்பட் டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08