தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எவரும் வெளியில் செல்­லப்­போ­வ­தில்லை. அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தில் இருப்­பதா இல்­லையா என்பதை டிசம்பர் மாதத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்போம் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

கட்­சி­க­ளுக்குள் பிரச்­சினை ஏற்­ப­டு­வது சாதா­ர­ண­ வி­டயம். அனைத்து கட்­சி­க­ளிலும் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதே­போன்று எமது கட்­சிக்குள் இருக்கும் உள்­வி­வ­கார பிரச்­சி­னை­களை பேசித்­தீர்த்­துக்­கொள்­ளலாம்.அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருக்கும் நாங்கள் அவ­ச­ரப்­பட்டு தீர்­மானம் எடுக்கும் நிலையில் இல்லை. இது அதற்­கு­ரிய காலமும் அல்ல.

அத்­துடன் நாட்டில் தேசிய அர­சாங்கம் பகி­ரங்­க­மா­கவே  அமைக்­கப்­பட்­டது. யாருக்கும் மறைக்­க­வில்லை. பொதுத்­தேர்­தலில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு எந்­த­வொரு கட்­சிக்கும் மக்கள் ஆணை கிடைக்­க­வில்லை. அதனால் தனிக் கட்­சி­யினால் செய்­ய­மு­டி­யா­ததை பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து நாட்டில் ஏற்­ப­டுத்­த­வேண்­டிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த கட்­சியின் மத்­திய செயற்­குழு தீர்­மா­னித்­தது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே இரண்டு கட்­சி­களும் இணைந்து செயற்­பட ஒப்­பந்தம் செய்­து­கொள்­ளப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டையில் இரண்டு கட்­சி­களும் செய்­து­கொண்ட ஒப்­பந்தம் எதிர்­வரும் டிசம்பர் மாதத்­தில் நிறை­வ­டை­கின்­றது. அதனால் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து இருப்­பதா இல்­லையா என்­பதை டிசம்பர் மாதத்­திலேயே தீர்­மா­னிக்க முடியும். அதனால் இது­தொ­டர்­பாக இப்­போதே கலந்­து­ரை­யாட எந்த தேவையும் இல்லை. அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருக்கும் எவரும் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற மாட்­டார்கள்.

அத்­துடன் நாட்டின் ஸ்­தி­ரத்­தன்­மையின் அடிப்­ப­டை­யிலேயே நாட்டின் அபி­வி­ருத்தி வேகம் மற்றும் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் வரு­கைகள் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன. ஒப்­பந்த காலம் முடி­வ­டை­வ­தென்­பது இரண்டு கட்­சிகள் இணைந்து எடுக்­கப்­படும் தீர்­மா­னத்தில் இருக்­கின்­றது. ஆனால் இந்த ஒப்­பந்தம் தொடர்­பாக ஊட­கங்கள் தேவை­யற்ற பிர­சா­ரங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுப்­பதால் நாட்­டுக்குள் தேவை­யற்ற குழப்­பங்கள் மற்றும் சர்­வ­தேச நாடு­களில் எமது நாடு­ தொ­டர்­பாக சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது. இதனால் நாட்டின் அபி­வி­ருத்தி உட்­பட அனைத்து விட­யங்­க­ளுக்கும் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது.

அதனால் ஒப்­பந்தம் தொடர்­பாக உறு­தி­யான தீர்­மானம் ஒன்றை எடுக்­கும்­போது அது­தொ­டர்­பாக நாட்டு மக்­க­ளுக்கு எடுத்துக்கூறுவது ஊட­கங்­களின் பொறுப்­பாகும். அதனால் நாட்டை ஸ்­தி­ர­மற்ற நிலைக்கு ஆளாக்கும் செய்­தி­களை ஊட­கங்கள் பிர­சாரம் செய்­ய­வேண்டாம் என கேட்­டுக்­கொள்­கின்றேன். அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தில் இருப்­பதா இல்­லையா என்­பது தொடர்­பாக ஏதா­வது தீர்­மா­னங்­களை எடுத்தால், வெளிப்­ப­டை­யாக அறி­விப்போம். அதில் எத­னையும் மறைக்­க­வேண்­டி­ய­தில்லை. யாருக்கும் மறைத்து ஒப்­பந்தம் செய்­ய­வில்லை.

எனவே தேசிய அர­சாங்கம் தொடர்­பான 

ஒப்பந்த காலம் டிசம்பர் மாதத்திலேயே முடி வடைகின்றது. அதனால் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதா அல்லது தொடர்ந்து தேசிய அரசாங்கத்தில் இருப்பதா என்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை. அவ்வாறு தீர்மானம் எடுப்பதாக இருந்தால் டிசம்பர் மாதத்திலேயே உத்தியோகபூர்வமாக அறிவிக்கமுடியும் என்றார்.