எதிர்­பார்ப்­புடன் காத்­தி­ருங்கள் திங்களன்று முக்­கிய நபர் சாட்­சிய­ம­ளிப்பார்

Published By: Raam

21 Jul, 2017 | 08:58 AM
image

பலத்த எதிர்­பார்ப்­புடன் காத்­தி­ருங்கள். பிணை­முறி விசா­ர­ணை­யோடு தொடர்­பு­டைய முக்­கிய நப­ரொ­ருவர் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­ப­டுவார் என உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டீ. சித்­தி­ர­சிறி தெரி­வித்தார்.

நேற்றுக் காலை 10.30 மணிக்கு ஆரம்­ப­மா­கிய பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பணிகள் மத்­திய வங்­கியின் பொதுக்­கடன்  திணைக்­க­ளத்தின் பிரதி  அத்­தி­யட்­சகர் கமகே பிர­பாத்தின் சாட்­சிப்­ப­தி­வு­க­ளோடு ­ஆ­ரம்­ப­மா­கின.

சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி விவ­கா­ரத்தின் முக்­கிய கால­கட்­ட­மாக கரு­தப்­படும் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி முதலாம் திகதி  முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­குதி கரு­தப்­ப­டு­கின்­றது. குறித்த காலப்­ப­கு­தியில் மத்­திய வங்­கியின்  பொதுக்­கடன்  திணைக்­க­ளத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பிணை­முறி தொடர்­பான அனைத்து ஆவ­ணக்­காப்­புக்­களும் சாட்­சிப்­ப­தி­வு­க­ளுக்­காக மீள்­ப­ரி­சோ­தனை செய்­யப்­பட்­டன. 

பிணைமுறி மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டீ. சித்­தி­ர­சிறி, பி.எஸ்.ஜெய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

கொழும்பு - புதுக்­க­டையில் உள்ள நீதி­ய­மைச்சின் கட்­டடத் தொகு­தியில் அமைக்­கப்பட்­டுள்ள மேற்­படி விசா­ரணை ஆணைக்குழுவின் விசா­ரணை அறையில் இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்து முதலில்

மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் நிஹால் பெர்­னாண்­டோவின் நெறிப்­ப­டுத்­த­லுடன் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

இதன்­போது 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட மத்­திய வங்­கியின் ஆவ­ணக்­காப்­புக்­களை சரி­பார்த்து கூறி­ய­துடன் பேப்­பச்­சுவல் நிறு­வ­னத்­து­டனும் ஏனைய முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளு­டனும் ஏலத்தின் கொடுக்கல் – வாங்­கல்கள் தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது.

மத்திய வங்கியின் பொதுக்கடன்  திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகர் கமகே பிரபாத்தின் சாட்சிய பதிவுகள் நிறைவடைந்தவுடன் அடுத்த விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் எனவும் எதிர்பார்த்து காத்திருங்கள் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47