காலமான காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தனவுக்கு பதிலாக புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்துக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை வந்தடைந்தன் பின்னரே இந்த நியமனம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுகயீனம் காரணமாக சிங்கப்பூரில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். 

இந்த நிலையில் மீண்டும் கொழும்பில் தனியார் வைத்தியசதலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன தனது 69 வயதில் காலமானமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலக பொருளாதார மாநாட்டில் பங்ககேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை சுவிட்சர்லாந்து பயணமாகியதோடு குறித்த மாநாடு இன்று முதல் நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது.