மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் நபர் ஒருவர்  ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சடலத்தை ரயில் ஓட்டிகள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.  இதில் உயிரிழந்தவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர்  எனவும் இது வரை நபர் யார் என அடையாளம்   காணப்படவில்லை எனவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.