இலங்கையில் ஐடி மற்றும் வணிகமேற்படிப்புக்களை வழங்குவதில் முன்னோடியானதான இன்வோர்மடிக் இன்ஸிடியுட் ஒஃப் டெக்னோலஜி, சமீபத்தில் கொழும்பு மிராஜில் தரவுகளின் பகுப்பாய்விற்கான திறந்த மன்றக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது.

இந்நிகழ்வில் பல புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் ப்ளு சிப் நிறுவனங்களைச் சார்ந்த ஐடி மற்றும் கூட்டுறவு நிறுவன நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர். இத்திறந்தமன்றக் கலந்துரையாடலின்போது பெரியதரவுகளின் பயன்பாடு, வணிகபகுப்பாய்வு மற்றும் நிறுவனமானது வெற்றியை அடையும் பொருட்டு வலுப்படுத்தப்படக் கூடிய வணிக நுண்ணறிவுக் கருவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

ஐஐடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் வைத்தியர். சம்பத் கன்னங்கர, யுகே, ரொபர்ட் கோர்டன் யுனிவர்சிட்டியின் நுண்ணறிவுக் கட்டமைப்பு ஆராய்ச்சிக்கான பேராசிரியர்  ப்ரொபசர் நிர்மலிவீரதுங்க, ஐஐடி சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் பாடநெறித் தலைவரான காசிம் பாருக் மற்றும் ஐஐடி சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் பாடநெறி ஒருங்கமைப்பாளர் அல்ரோய் மஸ்கரங்கே இந் நிகழ்வில் உரையாற்றினர்.

இந் நிகழ்வில் ஸ்கொட்லாண்ட், அபெர்டீனில் அமைந்துள்ளரொபர்ட் கோர்டன் யுனிவர்ஸிட்டியின் ஸ்கூல் ஒ.ப் கம்ப்யூட்டிங் சையின்ஸ் அன்ட் டிஜிடல் மீடியாவை சார்ந்த வைத்தியர். நிர்மலி வீரதுங்க உரையாற்றுகையில் ரொபர்ட் கோர்டன் யூனிவர்சிட்டியில் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ள தலைப்பாக பெரிய தரவுப் பகுப்பாய்வு காணப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

இந் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், ஐஐடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் வைத்தியர். சம்பத் கன்னங்கரர் “உலகளாவிய ரீதியாக புகழ்பெற்ற இளமானி மற்றும் முதுமானி பட்டங்களை வழங்குவதில் ஐஐடி நிறுவனம் முன்னோடியாக காணப்படுகின்றது. தங்களது நிறுவனங்களை வலுப்படுத்தக் கூடிய அனைத்துச் சுற்றிலும் திறமையுள்ள பட்டதாரிகளை உருவாக்குவதிலேயே நாம் கடந்த பல வருடமாக எமது கவனத்தை செலுத்திவருகின்றோம். தொழிற்துறைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தகுந்த வகையிலான பட்டதாரிகளை உருவாக்குவதில் நாம் எமது கவனத்தை செலுத்தி வருவதனால் ஐஐடியின் மூலம் பட்டதாரிகளாக்கப்பட்ட பட்டதாரிகளிற்கான கோரிக்கை அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் அதிகரித்துக் காணப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களது தொழில் துறைகளில் சிறந்து விளங்குவதற்கு தேவையான திறன் அபிவிருத்தியை மாணவர்களிற்கு வழங்குவதுடன் அறிவை அதிகரிக்க ஐஐடியின் மூலம் வழங்கப்படுகின்ற முதுகலை பட்டப்படிப்புக்கள் மாணவர்களிற்கு உதவுகின்றன. உலகளாவிய ரீதியாக புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஐஐடி வழங்கும் சிறப்பு முதுகலைப் பட்டப்படிப்புக்கள் எங்களது பட்டதாரிகளிற்கு ஒரு நல்ல போட்டித்தன்மையை வழங்கும்” என்று குறிப்பிட்டார். 

“வணிக பகுப்பாய்வு என்பது யாது? அநேகமானவர்கள் இது குறித்து இந்தக் காலப்பகுதியிலே உரையாடுகின்றனர். இது வெறுமனே நுண்ணறிவு பற்றிய தகவல்களை உள்ளடக்குவதேயாகும். நேட் பிலிக்ஸ் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களானால், அவர்களிடம் தரவுகளுடன் அனேக சந்தாதாரர்களும் உண்டு. சந்தாதாரர்கள் பார்க்க விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வகைகள் குறித்ததான விரிவான ஆய்வு ஒன்றில் ஈடுபட்ட பின்னர், அவர்கள் குறிப்பிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிற் கிடையேயான தொடர்பைக் கண்டறிந்தது அமெரிக்க பதிப்பாகிய ஹவுஸ் ஒ.ப் கார்ட்ஸ் எனும் நிகழ்ச்சியை தயாரித்ததுடன் அது பாரிய வெற்றியையும் பெற்றுத் தந்தது. அதேபோல வணிகபகுப்பாய்வில் பயன்படுத்துகின்றமற்றைய உதாரணங்களாக பம்பர்ஸ் மற்றும் பீர் என்பன காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரபலமான பல்பொருள் அங்காடியானது, மளிகைக்கடைகளில் கொள்வனவு செய்யும் பொழுது வாடிக்கையாளர்கள் ஒன்றாக கொள்வனவு செய்ய விரும்பும் பொருட்கள் குறித்தான ஆய்வொன்றில் ஈடுபட்டபொழுது அவர்கள் பம்பர்ஸ் மற்றும் பீர்கள் ஒன்றாக  கொள்வனவு செய்யப்படுவதை அவதானித்தனர். ஆகவே அவர்கள் இவ்விரண்டு பொருட்களையும் அருகருகே வைத்ததுடன் குறிப்பிட்ட இரண்டு பொருட்களிற்குமான சிறப்பு விற்பனையையும் ஆரம்பித்ததன் மூலமாக விற்பனையின் அளவும் அதிகரித்தது. ”என்று வணிக பகுப்பாய்வு எனும் தலைப்புக் குறித்து உரையாற்றுகையில் அல்ரோய் மஸ்கரங்கே குறிப்பிட்டார்.

ஐஐடி சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் பாடநெறித் தலைவரான காசிம் பாருக்; உரையாற்றுகையில், தரவு பகுப்பாய்வு என்பது, தொழில்நுட்ப ஆர்வலர்கள், ஆர்அன்ட் டி மற்றும் ஆராய்ச்சியாளர் வடிவமைப்பாளர்கள், தீர்வு வடிவமைப்பாளர்கள், ஏற்படுத்துனர்கள் மற்றும் பொறியியலாளர்கள் என்பவர்களையே இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் ஐஐடியின் மூலம் வழங்கப்படுகின்ற எம்எஸ் உதரவுப் பகுப்பாய்வானது தரவுப் பகுப்பாய்விற்கான எழுச்சியை வழங்கத்தக்க போதுமான தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்ததான ஆழமான அறிவினை மாணவர்களிற்கு வழங்கும் என்றும் குறிப்பிட்டார். 

தற்போது ஐஐடி ஆனது, ரொபர்ட் கோர்டன் யுனிவர் சிட்டியின் எம்எஸ் உதரவுப் புகுப்பாய்வு மற்றும் எம்எஸ் வணிகபகுப்பாய்வு பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகின்றது. மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது பதிவு செய்வதற்கு 0722 727272 எனும் எண்ணிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துக. அல்லது www.iit.ac.lk எனும் இணைத்தளத்திற்கு விஜயம் செய்க.