கூட்டாக இணைந்து சவுதி மற்றும் கல்ப் வலயத்தினுள் பிச்சையெடுத்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 கோடிஸ்வரர்களை அந் நாட்டு பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சவுதி பிரஜைகள் எனவும் இதில் பெண்களும், குழந்தைகளும் உள்ளடங்கிள்ளனர் என அந் நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அல் காசிம் பகுதியில் சகல வசதிகள் நிரம்பிய தொடர் அடுக்கு மாடிகளில் வாழ்ந்து வந்த இவர்கள்  மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறு பிச்சை எடுத்து குடும்ப பாவனைக்காக அதி நவீன வசதிகள் நிரம்பிய கார் உட்பட ஐந்து கார்களை வாங்கியுள்ளனர். இக் கார்களை பயன்படுத்தி வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று விபத்து ஏற்பட்டதை போல் நடித்து தனவந்தர்களின் அனுதாபங்களால் பணம் பெற்று வந்துள்ளனர்.

குறித்த 21 பேரையும் கைது செய்யும் போது அவர்களிடமிருந்து சவுதி ரியால் 12,049 மற்றும் திரம் 150 என்பனவற்றோடு தங்க நகைகளையும் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சவுதி உள்ளிட்ட கல்ப் வலயங்களில் பிச்சை எடுத்தல், பணம் பெறல் என்பன சட்ட விரோத குற்றமாக கருதப்படுகிறது.