வவுனியாவில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரைத்தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தினை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர். 

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புகையிரதத்திற்கு முன்பாகவுள்ள மதுபான விருந்தினர் விடுதியிலிருந்து மது அருந்திவிட்டு வந்த சில இளைஞர்கள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து வீடு சென்றுகொண்டிருந்த குருமன்காட்டில் வசித்துவரும் அற்புதராஜா தர்சன்  30 வயதுடைய குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவரிடத்திலிருந்த 62,100 ரூபா பணத்தினைத் திருடிச் சென்றுள்ளனர். 

இதையடுத்து காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.