கொழும்பின் சில பகுதிகளில் நாளை 19 மணிநேர நீர் வெட்டு இடம்­பெறும் என தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கிராண்பாஸ், கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, தொட்டலங்க, ஜயந்த வீரசேகர மாவத்தை, மாளிகாவத்தை ஆகிய  பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதன்படி நாளை இரவு 11.00 மணிமுதல் மறுநாள் மாலை 6.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நீர் வெட்டின் பின்னர் சிரமங்களுக்கு உள்ளாகாமல் முன்தினமே நீரை சேமித்து வைக்கும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.