இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு : குப்பை பிரச்சினை தொடருகிறது..!

Published By: Robert

20 Jul, 2017 | 12:45 PM
image

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 

அதன்பிரகாரம், குறித்த தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

இது தொடர்பில்  முத்­து­ரா­ஜ­வல பகு­தியைச் சேர்ந்த 35 பேரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு கடந்த ஜூலை 5 ஆம் திகதி, உச்ச நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துராஜவல பிரதேசத்தில் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்தது.

இந்நிலையில் தாக்கல் செய்­யப்­பட்ட குறித்த மனுவை மீண்டும் இன்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக கொழும்பு மாந­கர சபை, மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை போன்ற நிறு­வ­னங்கள் இணைக்­கப்­பட்­டுள்­ளன. 

நாட்டில் தற்போது டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாரிய பிரச்சினையாக காணப்படும் குப்பை தொடர்பான பிரச்சினைக்கு நீதிமன்றம் இந்த தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06