புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சியம் தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் வழங்கப்படுகின்றது.

இந்த வழக்கை விசாரணை செய்த குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக அவர் செயற்பட்டார்.

இந்த வழக்கில் 9 எதிரிகளுக்கும் எதிரான சாட்சியங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எதிரிகளை வழமையாக முற்படுத்தும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக இன்றைய தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டு முதன்முறையாக சிறப்பு அதிரடிப் படையினரும் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.