இரத்மலானை பிரதேசத்தில் நேற்று கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 3.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகுமென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரத்மலானை பொருளாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து 218 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.