வாடகை வாக­ன­மொன்றில் பயணம் செய்த நப­ரொ­ருவர் அவ்­வா­க­னத்தின் சார­திக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து  கொடுத்து அவ­ரி­ட­மி­ருந்து தங்கச் சங்­கிலி உட்­பட பணத்­தி­னையும் அப­க­ரித்துச் சென்ற சம்­ப­வ­மொன்று தெல்­தோட்டை பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் இடம் பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரிய வரு­வ­தா­வது, 

சம்­ப­வ­தி­ன­ம்  கலஹா நக­ரி­லி­ருந்து தெல்­தோட்டை பகு­திக்கு நப­ரொ­ருவர் முச்­சக்­கர வண்­டி­ய ொன்­றினை வாட­கைக்கு அமர்த்திச் சென்­றுள்ளார். 

இதன்­போது தெல்­தோட்டை  கர­கஸ்­கட பிர­தே­சத்தில் குறித்த முச்­சக்­கர வண்­டி­ யினை நிறுத்தச் செய்த குறித்த  நபர், தாக ­மாக இருப்­ப­தாக கூறி அரு­கி­லி­ருந்த கடை­யொன்­றுக்குச் சென்று குளிர்­பான போத்­த­லொன்­றினை வாங்கி குடித்­துள்­ள­துடன்,  தன்­னுடன் வந்த சார­திக்கும் குளிர் பான போத்­த­லொன்­றினை வாங்கி கொடுத்­துள்ளார். குளிர் பானத்தை பரு­கிய சாரதி மயக்­க­முற்­ற­தை­ய­டுத்து, அந் நபர் முச்­சக்­கர வண்டி சாரதி அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கிலி உட்­பட பணத்­தி­னையும் அப­க­ரித்­துக்­கொண்டு தலை­ம­றை­வா­கி­யுள்ளார்.

மயக்­க­முற்­றி­ருந்த சார­தியை பிர­தே­ச­வா­சிகள் மீட்டு தெல்­தோட்டை வைத்­திய சாலையில் அனு­ம­தித்­துள்­ளனர். பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம தொடர்பான விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.