Image result for சுருக்­கிட்டு தற்­கொலை virakesari

கண­வ­னுக்கு தொலை­பேசி ஊடாக அறி­வித்து விட்டு, மனைவி சுருக்­கிட்டுத் தற் ­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று  பண்­டா­ர­வளைப் பகு­தியின் மாலி­கா­தென்ன என்ற இடத்தில் நேற்­று முன்தினம் இடம்­பெற்­றுள்­ளது. 

மாலி­கா­தென்ன என்ற இடத்தைச் சேர்ந்த தம்­மிக்க பிரி­யந்தி ரட்­னா­யக்க என்ற (27 வயது) நிரம்­பிய இளம் குடும்பப் பெண் ணே இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார்.

இம் மரணம் குறித்து, பதுளை அர­சினர் மருத்­து­வ­மனை சட்ட வைத்­திய அதி­காரி எம்.டி.கே. விஜே­வீர பிரேத பரி­சோ­த­னையை மேற்­கொண்­ட­தோடு, திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஆர்.எம்.ரட்­னா­யக்க மரண விசா­ர­ணை­களை மேற்­கொண்டு, வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­ளி­ன­டிப்­ப­டையில் தற்­கொலை எனத் தீர்ப்பு வழங்­கினார்.

இச்­சாட்­சி­யங்­களின் பிர­காரம், தற்­கொலை செய்து கொண்­டுள்ள இளம் குடும்­பப்பெண் தனது ஏழு­வ­யது சிறு­வனை அயல் வீட்டில் நிறுத்­தி­விட்டு,  மூன்று வயதுக் குழந்­தைக்கு தாய்ப்­பாலை பருக்கி, அக்­கு­ழந்­தையை உற ங்­கச்­செய்­துள்ளார். 

அதன் பின்னர் அப்பெண் தனது கண­வ­ருக்கு கைய­டக்கத் தொலை­பேசி மூலம் தற் ­கொலை செய்­யப்­போ­வ­தாகக் கூறி­விட்டு கழுத்தில் சுருக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்­ளா­ரென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

தற்­கொலை செய்து கொண்டுள்ள பெண் ணின் கணவனும் தனக்கு அறிவித்து விட்டே தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தினார்.