கண்டி யஹ­ல­தென்ன முஸ்லிம் வித்­தி­ யா­ல­யத்தில் இந்து, கிறிஸ்­தவ மாண­வர்­க­ளுக்கு சமயம் கற்­பிக்க ஆசி­ரி­யர்கள் இன்­மை­யினால்  கட்­டாய பாட­மான சமய பாடத்­திற்­காக குறித்த மாண­வர்கள் இஸ்லாம் கற்க வேண்­டிய இக்­கட்­டான நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளார்கள் என்று மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஹிதாயத் சத்தார் தெரி­வித்தார். 

மத்­திய மாகாண சபைத் தலைவர் எல்.டி.நிம­ல­சிறி தலை­மையில் பல்­லே­க­லையில் அமைந்­துள்ள மத்­திய மாகாண சபை கட்­டி­டத்தில் இடம்பெற்ற மத்­திய மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-

சில மாகா­ணங்­களில் பட்­ட­தாரிகள் தொழில் கேட்டு போராட்டம் நடத்­து­கின்­றனர். சில­ரது போராட்­டத்­திற்கு நூறு நாற்­களும் கடந்து விட்­டன.

 ஆனால், மத்­திய மாகா­ணத்தில் இரண்­டா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட தமிழ் ஆசி­ரியர் வெற்­றிடம் காணப்­பட்ட போதும் 721 விண்­ணப்­பங்­களே கிடைத்­தன. இதன் கார­ண­மாக போட்டிப் பரீட்சை இன்றி நேர்முகப் பரீ­டசை மூலம் தகு­தி­யுள்ள சக­லரும் தெரிவு செய்­யப்­பட்­டனர். ஆனால் அதில் சில குள­று­ப­டிகள் உள்­ளன.

எத்­து­றைக்கு ஆசி­ரியர் தேவை எனக் கரு­தாது நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக எனது ஊரான யஹ­லத்­தென்­னயில் உள்ள முஸ்லிம் மகா­வித்­தி­யா­ல­யத்தில் 20 சத­வீதம் தமிழ் மாண­வர்கள் உள்­ளனர். 

அவர்­க­ளுக்கு சமய பாடம் கட்­டாயம் தேவை. ஆனால் அதனைக் கற்­பிக்க ஆசி­ரி­ யர்கள் இல்லை. எனவே, அத்­த­கைய மாண­வர்கள் இஸ்லாம் சமய பாடத்தை படித்து சாதா­ரண தரப் பரீட்சை எழு­து­கின்­றனர். அவர்கள் பரீட்­சையில் சித்­தி­ய­டைய இதனைச் செய்­தாலும் இது அவர்­க­ளது உரிமை மீற­லாகும். இதற்­கான வாய்ப்பு ஏற்­ப­டுத்த வேண்டும். எனவே, முஸ்லிம் பாட­சா­லை­களில் உள்ள  ஒரு சில தமிழ் மாண­வர்­க­ளது நலன் கருதி இந்து சமய ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றார்.