மட்டக்குளிய அளுத்மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான 1000 சிகரட் பக்கட்டுகளுடன் நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கொழும்பு விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சிகரட் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட சட்ட விரோத சிகரட் பக்கட்டுகளை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த நிலையிலேயே அந் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட் பக்கட்டுகள் மற்றும் குறித்த நபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.