சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்காக மகர நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே தப்பிச்சென்றுள்ளனர்.

கை விலங்கிடப்பட்டிருந்த குறித்த சிறை கைதிகள் இருவரும் சிறை அதிகாரியின் காற்சட்டை பைக்குள் இருந்த சாவியை எடுத்து கை விலங்கை திறந்து கை விலங்கினாலேயே சிறை அதிகாரியை தாக்கியுள்ளனர்.

அதன்பின்னர், சிறை அதிகாரிக்கு கை விலங்கிட்டு வாயினுள் துணிகளை அடைத்து கொடூரமாக சித்திரவதை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.