கம­லுக்கு அர­சி­யலுக்கு வர தைரியம் உண்டா?

Published By: Robert

19 Jul, 2017 | 10:14 AM
image

ஆட்­சியை விமர்­சித்த நடிகர் கம­லுக்கு எதி­ராக, அ.தி.மு.க. அமைச்­சர்கள் போர்க்­கொடி உயர்த்தியுள்­ளனர். இந்­நி­லையில் கம­லுக்கு அர­சிய­லுக்கு வர தைரியம் இருக்­கி­றதா என அவர்கள் சவால் விடுத்­துள்­ளனர்.

'தமி­ழ­கத்தில், அனைத்து மட்­டங்­க­ளிலும் ஊழல் மலிந்து விட்­டது' என, நடிகர் கமல், சமீ­பத்தில் கூறி­யி­ருந்தார். இதற்கு, ஆளும் கட்­சி­யினர் எதிர்ப்பும், எதிர்க்­கட்­சி­யினர் ஆத­ரவும் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் அ.தி.மு.க.  அமைச்­சர்கள்  இது குறித்து தெரி­வித்­துள்­ள­தா­வது,

 ஜெய­ல­லிதா  இருக்கும் வரை வாயை மூடிக்­கொண்­டி­ருந்த கமல், இன்று வாயை திறப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது. ஜெ. அரசு மீது சேறு பூசு­வதால், பதில் கொடுக்­கிறோம். அர­சி­ய­லுக்கு வர அவ­ருக்கு தைரி­ய­மில்லை. கமல் முட்டு கொடுக்கும் நிலையில் தி.மு.க. பரி­தா­ப­மான நிலை யில் உள்­ளது.

 ஜன­நா­யகம் குறித்து பேசி உள்ளார். குற்­றச்­சாட்­டுக்கு பதில் கூறு­வதும் ஜன­நா­யகம் தான். கரு­ணா­நிதி முதல்­வ­ராக இருந்த போது, அவர் பங்­கேற்ற கூட்­டத்தில், 'நடி­கர்கள் மிரட்­டப்­ப­டு­கின்­றனர்' என, நடிகர் அஜித் பேசிய போது, கமல் எங்­கி­ருந்தார். அவர் யாரு­டைய ஊது­கு­ழ­லாக உள்ளார். குற்­றச்­சாட்டை ஆதா­ரத்­துடன் கூறினால் பதில் தர தயார்.

ஏதோ பேசி­விட்டார் அவரை, ஸ்டாலின் வர­வேற்­றுள்ளார். எங்­களை குற்றம் சொல்­வோரை, ஸ்டாலின் வர­வேற்­பது ஆச்­சர்யம் அல்ல. கமல், இவ்வாறு பேசு­வது கவ­லை­ய­ழிக்­கின்­றது என தெரி­வித்­துள்­ளனர்.

எனினும் இந்­நி­லையில் முன்னாள் முதல்வர் பன்­னீர்­செல்வம் கமலின் கருத்­துக்கு ஆத­ர­வான வகையில் தனது கருத்தை வெளியிட்­டுள்ளார். இது குறித்து அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஜன­நா­ய­கத்தில், ஒரு ஆட்சி குறித்து கருத்து கூற, அனை­வ­ருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் கமல் தன் கருத்தை வெளி­யிட்­டுள்ளார். இதற்­காக அவரை எதிர்ப்­பது நியா­ய­மல்ல. ஆளும் கட்­சி­யினர் இந்த ஆட்­சியை வழி­ந­டத்­து­வதில் மெத்­த­னப்­போக்­குடன் நடந்து கொள்­கின்­றனர் என தெரி­வித்­துள்ளார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் கே.பி.முனு­சா­மியும் கம­லுக்கு ஆத­ரவாக தனது கருத்தை வெளியிட்­டுள்ளார். இது குறித்து அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஜன­நா­யக நாட்டில், எந்த குடி­ம­க­னுக்கும், ஆட்­சியை விமர்­சிக்கும் முழு உரிமை உண்டு. கமல் இந்த ஆட்­சியை, விமர்­சனம் செய்­துள்ளார். அவ­ரது விமர்­ச­னத்தை ஆட்­சி­யா­ளர்கள் பொறு­மை­யாக கேட்­ட­றிந்து, உரிய பதிலை தர வேண்டும். ஆட்­சி­யா­ளர்கள் கோபப்­ப­டு­வது, இயற்­கைக்கு, அர­சியல் தர்­மத்­திற்கு மாறான செயல். ஒருவர் குறை சொல்லும் போது, அதற்கு பதில் கூற வேண்டும். தனிப்­பட்ட முறையில் விமர்­சிக்­கவோ, பழிக்­கவோ கூடாது. கமலை குறை கூறினால் அவர்­களின் மரி­யாதை தான் குறையும் என ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35