தன்னால் வின­வப்­பட்ட கணிதம் தொடர்பான கேள்­வி­க­ளுக்கு சரி­யாக பதி­ல­ளிக்­க­வி ல்லை என்ற கார­ணத்­துக்­காக தனது  3 வயது மகளை  தந்­தை­யொ­ருவர் படு­கொலை செய்­தமை தொடர்­பான விப­ரீத வழக்­கு

­கொன்று நேற்று முன்­தினம்  திங்­கட்­கி­ழமை அமெ­ரிக்க  மிஸி­ஸிப்பி மாநி­லத்­தி­லுள்ள நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

ஜொஷுவா சலோவிச் (25  வயது)  என்ற தந்தையே இவ்வாறு தனது மகளான  பெய்லி சலோவிச்சை  கடந்த வெள்ளிக்கிழமை  படுகொலை செய்துள்ளார்.

தன்னால் வினவப்பட்ட கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையிலுள்ள தனது மகள்  எதிர்காலத்தில் வாழ்வதற்கு  போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே அவரைப் படுகொலை செய்ததாக ஜொஷுவா சலோவிச் கூறினார்.

அவர் தனது மகளைப் படுகொலை செய்வதற்கு மூங்கில் தடி, தொலை பேசி இணைப்பு மற்றும் தனது கரங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

படுகொலை இடம்பெற்ற போது  அந்த சிறுமியின் தாயார் வேறொரு அறையில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில்  பிராந்திய பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.