2017 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பங்குச்சந்தை நடவடிக்கை உறுதியாக பதிவு

Published By: Robert

19 Jul, 2017 | 10:29 AM
image

2016 ஆம் ஆண்டில் மந்­த­மான பெறு­பேற்­றினை பதிவு செய்த கொழும்பு பங்­குப்­ப­ரி­வர்த்­த­னையின் நட­வ­டிக்­கைகள் 2017ஆம் ஆண்டு முதலாம் அரை­யாண்டு வரையில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றத்­தினை பதிவு செய்­துள்­ளது.

அந்த வகையில் கடந்த அரை­யாண்டு காலத்தில், அனைத்­துப்­பங்கு விலைச்­சுட்டி (ASPI) 8.23% உறு­தி­யான வளர்ச்­சி­யினை பதி­வு­செய்து, ஜுலை 17 ஆம் திகதி 6741.07 புள்­ளி­க­ளாகக் காணப்­பட்­டது. பாரிய மூல­தனம் மற்றும் திர­வத்­தன்மை நிறைந்த பண்­புசார் பட்­டி­யற்­ப­டுத்­தப்­பட்ட 20 கம்­ப­னி­களை உள்­ள­டக்­கிய S&P SL 20 விலைச்­சுட்டி 11.03% வளர்ச்­சி­யினை முதல் அரை­யாண்டில் பதிவு செய்து, ஜூலை 17 ஆம் திகதி 3882.14 புள்­ளி­க­ளாகக் காணப்­பட்­டது. 2016 மற்­றும் 2015 ஆண்­டு­காலப் பகு­தி­களில் முறையே 9.66% , 5.54% வரு­டாந்த வீழ்ச்சியினை வெளிப்­ப­டுத்­திய அனைத்­துப்­பங்கு விலைச்­சுட்டி (ASPI) 2017ஆம் ஆண்டில் வளர்ச்­சி­யினை பதிவு செய்து கொண்­டி­ருக்­கின்­றது.

2016ஆம் ஆண்டு 737.2 மில்­லியன் ரூபா­வாக காணப்­பட்ட நாளாந்த சரா­சரி புரள்வு, 2017ஆம் ஆண்டின் முதல் அரை­யாண்டு சரா­ச­ரி­யாக ரூபா. 911 மில்­லியன் பதிவு செய்து, மொத்த வியா­பார நட­வ­டிக்­கை­களும் துரி­த­ம­டைந்­துள்­ளது.

வெளி­நாட்டுச் செயற்­பாட்டுத் தூண்டல் 2017ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதத்தின் முதலாம் வாரம் தொடக்கம் தொடர்ச்­சி­யான 24 வாரங்­க­ளுக்கு தேறிய வெளி­நாட்டு முத­லீட்டு உட்­பாய்ச்­ச­லினைப் பதிவு செய்து, சந்தை வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் முத­லீட்­டுக்­கான ஆர்­வத்­தினை தன்­வ­சப்­ப­டுத்தி இருக்­கின்­றது.  குறிப்­பி­டத்­தக்க அபி­வி­ருத்­தி­யாக 2017ஆம் ஆண்டின் முதலாம் அரை­யாண்­டுக்­கான வெளி­நாட்டுக் கொள்­வ­னவு ரூபா 62.6 பில்­லியன் ஆகப்­ப­திவு செய்து, 2016ஆம் ஆண்டின் முதலாம் அரை­யாண்டு ரூபா 31.5 பில்­லி­யனைக் காட்­டிலும் இரு­ம­டங்­காகப் பதிவு செய்து நிதி­யாண்­டு­களின் அரை­யாண்­டிற்­கான உச்­ச­வ­ரம்­பாக அமைந்­துள்­ளது.

2017ஆம் ஆண்டில் தற்­போது வரை தேறிய வெளி­நாட்டு முத­லீட்டு உட்­பாய்ச்சல் ரூபா 23 பில்­லியன் பதிவு செய்­துள்­ளது. இது கடந்து ஆண்டைக் காட்­டிலும் ஓர் பாரிய அடை­வாகும். குறிப்­பாக 2016ஆம் ஆண்டு ரூபா 383.5 மில்­லியன் முத­லீட்டு உட்­பாய்ச்­ச­லினைப் பதிவு செய்­தி­ருந்­தது, மாறாக 2015இல் ரூபா 5.3 பில்­லியன் வெளிப்­பாய்ச்­ச­லாக அமைந்­தி­ருந்­தது. 2012ஆம் ஆண்டு வர­லாற்றில் அதி­கூ­டிய தேறிய வெளி­நாட்டு முத­லீட்டு உட்­பாய்ச்சல் ஆண்­டாக அமைந்­தி­ருந்­தது. 2012இல் முதல் அரை­யாண்டில் ரூபா 23.2 பில்­லியன் பதி­வா­கி­யி­ருந்­த­துடன், அந்த நிதி­யாண்டு முடிவில் உட்­பாய்ச்­ச­லாக ரூபா 38.6 பில்­லியன் பதிவு செய்­துள்­ளது.

அண்­மைக்­கா­லத்தில், மத்­திய வங்­கியின் வெளி­யகத் துறைப் பெறு­பே­றுகள் தொடர்­பான அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­ட­வாறு “பங்­குச்­சந்தை மற்றும் அரச பிணை­யங்­களின் சந்­தையில் தொடர்ச்­சி­யாக தொட­ரு­கின்ற வெளி­நாட்டு முத­லீட்டு உட்­பாய்ச்­சல்கள் நாட்டின் சென்­ம­தி­நி­லுவைக் கணக்­கிற்கு உறு­து­ணை­யாக அமைந்­துள்­ள­தாக ஏப்ரல் மாத அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பேரினப் பொரு­ளா­தார அடிப்­ப­டையில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் நிலைமை 2016 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் முறையே 42.0% , 34.4% ஆகக் காணப்­பட்ட மொத்த சந்தைப் புரள்வில் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களின் பங்­க­ளிப்பு 2017ஆம் ஆண்டில் 47.2% வளர்ச்­சி­யினை வழங்­கி­யி­ருந்­த­தோடு, 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்­போது வரை­யான காலப்­ப­கு­தி­களில் முதற்­த­ட­வை­யாக இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 50% த்தினை தாண்­டி­யுள்­ளது. பிராந்திய சந்தைகளுடன் ஒப்பிடுகையில் கவர்ச்சிகரமான ஓர் விலை உழைப்பு, பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகளின் அதிகரித்த இலாபம் மற்றும் ஓப்பீட்டளவில் விலைச்சுட்டிகளின் அசைவு மற்றும் உறுதியான செயலாற்றுகை என்பன வெளிநாட்டு முதலீடுகள் இலங்கை நோக்கி குவிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58