இலங்கை கிரிக்கெட் அணி யின் தலைவர் அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸிடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று விசேட விசா­ ர­ணை­களை மேற்­கொண்டு நீண்டசாட்­சியம் ஒன்­றினை பதி­வு­செய்­தது.

நடந்து முடிந்த மேற்­கிந்­தியதீவுகள் உட­னான தொடரின் போது குஷல் ஜனித் பெரே­ரா வும் ரங்­கன ஹேரத்தும் வலை பயிற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்த போது, வலை பயிற்சி உத­வி­யாளர் ஒருவர் ஊடாக இரு­வ­ரையும் ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­ப­டுத்த முயற்­சிக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த சாட்சியப் பதி­வுகள் இடம்­பெற்­ற­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அழைப்பின் பிர­காரம் நேற்று காலை 9.45 மணிக்கு நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ரான அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸிடம் சுமார் 5 மணி நேரம் வரை விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் அதன் போதே தேவை­யான சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

தனது சட்­டத்­த­ரணி நிஸான் பிரே­ம­ரத்­ன­வுடன் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வந்த அவர் புல­னாய்வு அதி­கா­ரி­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு இந்த சாட்­சி­யத்தை வழங்­கி­யுள்ளார். அதன் படி நீண்ட வாக்கு மூலம் ஒன்­றினை அளித்­துள்ள மெத்தியூஸ் மாலை 4.00 மணியளவில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறிச் சென்றார்.