கடு­மை­யான தீர்­மா­னங்கள் எடுத்த ஜனா­தி­பதி

Published By: Robert

19 Jul, 2017 | 11:11 AM
image

அமைச்­சர்கள் மற்றும் அமைச்சு அதி­கா­ரிகள் சிலர் வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளின்­போது குறித்த காலப்­ப­கு­தி­க­ளுக்கு மேல­தி­க­மாக அங்கு தங்­கு­கின்­றனர். ஆகவே இந்த விட­யத்தில் அமைச்சு மட்­டத்தில் கட்­டுப்­பாடு விதிக்க வேண்டும்.மேலும் கடந்த இரண்டு வருட காலத்தில் அமைச்­சுக்­களின் மட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டுகள் குறித்து தனக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­சர்­களின் செய­லா­ளர்­க­ளிடம் கோரி­யுள்ளார்.

அத்­துடன் ஐந்து வருடம் ஒரு பிர­தேச செய­ல­கத்தில் கட­மை­யாற்­றிய­வர்­களை இட­மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

கொழும்பு கோட்­டையில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற அமைச்சு செய­லா­ளர்­க­ளுக்­கான விசேட கூட்டம்  ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்­றது. இதன்­போது கடு­மை­யான தீர்­மா­னங்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்­துள்ளார்.இதன்­போது ஜனா­தி­பதி குறிப்­பி­டு­கையில்,

நாட்­டி­னதும் பொது­மக்­க­ளி­னதும் அபி­வி­ருத்தி எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­று­வ­தற்கு அனைத்து அமைச்­சுக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சுக்கு மட்டும் அனைத்து விட­யங்­க­ளையும் சாட்­டி­வி­டாது, குறித்த திட்­டத்தை வெற்­றி­பெ­றச்­செய்­வ­தற்கு தமது முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்­க­வேண்­டி­யது அனைத்து அமைச்சின் செய­லா­ளர்­க­ளி­னதும் பொறுப்­பாகும்.

வெளி­நாட்டு பய­ணங்­க­ளுக்கு கட்­டுப்­பாடு

அமைச்­சர்கள் மற்றும் அமைச்சு அதி­கா­ரி­களின் வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளின்­போது உயர்­மட்­டத்­தி­லி­ருந்து கீழ் மட்டம் வரை ஒரு கட்­டுப்­பாடு இருக்க வேண்டும். .சில அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரிகள் அரச மாநா­டு­களில் கலந்­து­கொள்­வ­தற்­காக வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று அம் மாநா­டுகள் நிறை­வு­பெற்­றதன் பின்­னரும் மேலும் சில நாட்கள் அந்­நா­டு­களில் தங்­கு­கின்­றனர். இந்த நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு ஒவ்­வொரு வரு­டமும் ஒரே அதி­காரி வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­வ­தற்குப் பதி­லாக வெவ்­வேறு அதி­கா­ரி­களைப் பயிற்­று­விக்கும் நிகழ்ச்­சித்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும்.

பிர­தேச செய­லா­ளர்­க­ளுக்கு இட­மாற்றம்

எந்த ஒரு­வரின் தேவைக்­கா­கவும் ஒரு பிர­தேச செய­லா­ளரை ஒரே இடத்தில் வைத்­துக்­கொள்ள முடி­யாது. ஆகவே ஐந்து வருடம் ஒரு பிர­தேச செய­ல­கத்தில் கட­மை­யாற்­றி­யவர்­களை இட­மாற்றம் செய்ய வேண்டும். இட­மாற்­றங்கள் தொடர்பில் கொள்கை ரீதி­யான தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும்.

ஒப்­பந்­தங்­களை ஆராய மேல­திக செய­லாளர்

நான் ஜனா­தி­பதி பத­விக்குத் தெரிவு செய்­யப்­பட்­டதன் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளின்­போது பல்­வேறு புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. அந்த உடன்­ப­டிக்­கை­களில் எதிர்­பார்க்­கப்­படும் இலக்­கு­களை நோக்கி பய­ணித்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் தொடர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் அமைச்சு மட்­டத்தில் பொறுப்­புக்­கூறும் மேல­திக செய­லாளர் ஒரு­வரை நிய­மித்து அதற்­காக தனி­யான ஒரு பிரிவை பேணு­வ­தற்கு அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

இரு வருட செயற்­பா­டுகள் குறித்து அறிக்கை

அடுத்த இரண்டு வாரங்­களில் அனைத்து அமைச்­சுக்­க­ளி­னதும் முன்­னேற்ற மீளாய்வுக் கூட்­டங்­களை நடத்த நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன். கடந்த இரண்­டரை வருட காலத்தில் அமைச்­சுக்­களின் செயற்­பா­டுகள் மற்றும் 2020 ஆம் ஆண்டை இலக்­காகக் கொண்ட நிகழ்ச்­சித்­திட்­டங்கள் குறித்து செய­லா­ளர்கள் எனக்கு இரு வாரத்தில் அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும். மேலும் அமைச்­சு­களில் உள்ள வெற்­றி­டங்­களை துரி­த­மாக நிரப்ப வேண்டும்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு துரித நட­வ­டிக்கை எடுங்கள்

அண்­மையில் ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு கார­ண­மாக வீடு­களை இழந்த மக்­க­ளுக்கு வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தற்கு காணி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கையை துரி­தப்­ப­டுத்த வேண்டும்.

அர­சாங்க வேலைத்­திட்­டங்­களை தெளி­வு­ப­டுத்த ஊடக அதி­கா­ரி­களை நிய­மி­யுங்கள்

அமைச்சு மட்­டங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் குறித்து மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு அமைச்சு மட்­டத்தில் ஊடக அதி­கா­ரி­களை நிய­மித்து அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தின் ஊடாக மக்­க­ளுக்கு தெளி­வுப்­ப­டுத்தும் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய நிகழ்ச்­சித்­திட்­டங்கள் தொடர்பில் இதனைப் பார்க்­கிலும் கூடுதல் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம். இதன்­படி  மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை அமைச்சு செயலாளர்களை சந்தித்து அமைச்சு நடவடிக்கைகள் குறித்து கண்டறிய நான் எதிர்பார்த்துள்ளேன்.

வரட்சி, உமாஓயா குறித்தும் அவதானம் செலுத்திய ஜனாதிபதி

வரட்சி நிலவும் பிரதேசங்களில் உள்ள மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்ட ஏனைய வசதிகள் குறித்தும் உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அமைச்சு மட்டத்தில் வழங்கப்பட்ட பொறுப்புக்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவது குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அமைச்சு செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58