இளம் காதலர்கள் ஹோட்டல் ஒன்றில் உல்­லா­ச­மாக இருந்தவேளை காதலி ஹோட்டல் அறையில் மர­ண­ம­டைந்த சம்­பவம் பமு­னுகம பொலிஸ் பிரிவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்­றுள்­ளது.

மினு­வாங்­கொட, கல்­கந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த 21 வயது யுவ­தியே மர­ண­ம­டைந்­த­வ­ராவார். 

சம்பவ தினம் அன்று வழமைபோன்று அங்கு சென்று இரு­வரும் உல்­லா­ச­மாக இருந்­த­போது காதலி திடீ­ரென்று சுக­யீ­ன­ம­டைந்­துள்ளார்.

பின்னர் ஹோட்டல் முகா­மை­யா­ள­ருடன் இணைந்து அந்த யுவ­தியை காதலர் பமு­னு­கம வைத்­தி­ய­சா­லையில் கொண்டு சென்று  அங்­கி­ருந்து  மேல­திக சிகிச்­சைக்­காக ராகமை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ளனர்.

வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கும் போது அந்த யுவதி இறந்­துள்­ள­தாக தெரியவரு­கி­றது.

சந்­தே­கத்தின் பேரில் யுவதியின் காதலரை பமுனுகம பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணை மேற்கொண் டுள்ளனர்.