தம்பித்துறையிடம் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை

Published By: Digital Desk 7

18 Jul, 2017 | 09:50 PM
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருகைதர கூடாது என கூறி மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் குற்ற புலனாய்வுதுறை இன்று 2 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 8ஆம் திகதி யாழ்ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அன்றைய தினம் நடைபெறவிருந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள கூடாது எனவும் அவ்வாறு கலந்து கொண்டால் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்போம் எனவும் கூறியிருந்தார். 

இந்த கருத்து தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு குறித்தே குற்ற புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இன்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் 2 மணிநேரம் மேற்படி விசாரணை நடத்தப்பட்டிருக்கின்றது.

இந்த விசாரணையில் யாழ்.மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரும் யாழ் ஊடக அமையத்தின் செயலாளருமான தம்பித்துரை பிரதீபன் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார். 

மேலும் இந்த விடயம் தொடர்பாக விசாரிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி தம்பித்துரை பிரதீபனை கொழும்புக்கு வருமாறு குற்றபுலனாய்வு துறை அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி நடமாட இயலாத நிலையில் இருந்ததால் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை. தாம் நடமாட இயலாத நிலையில் இருக்கின்றமை தொடர்பாக குற்றபுலனாய்வு துறையினருக்கு தெரியப்படுத்தியும் இருந்தார்.

இதனையடுத்து கொழும்பில் இருந்து யாழ் வந்த குற்ற புலனாய்வு துறையின் குழு ஒன்று யாழ் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வைத்து  இந்த  விசாரணைகளை  மேற்கொண்டிருந்தது.

மேலும் இந்த விசாரணைகளில் ஊடகவியலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு சிங்கள மொழியிலேயே அவருடைய விளக்கம் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08