மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின்  காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்  இன்று காலை கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 8 மாதங்களாக பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் நாங்கள் விளையாட விளையாட்டு மைதானம் தேவை. போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளை வழங்குவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களுக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக குறித்த சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.