சிம்பாவேயின்  வரலாற்று வெற்றிக் கனவை தகர்த்த இலங்கை 4 விக்கெட்டுகளால் வெற்றி

Published By: Priyatharshan

18 Jul, 2017 | 02:53 PM
image

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சிம்பாப்வே அணியின் வரலாற்று வெற்றிக்கனவை தகர்த்தது.

இலங்கை –சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரே­யொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணியின் எர்வின் விளாசிய சதத்தால் (160) அந்த அணி முதல் இன்­னிங்ஸில் 356 ஓட்­டங்­களைக் குவித்­தது. பின்னர் முதல் இன்­னிங் ஸை தொடங்­கிய இலங்கை அணி 346 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. 

முதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் சிம்­பாப்வே அணி 2ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது. 

3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் சிம்­பாப்வே 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 252 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. சிகந்தர் ரசா 97 ஓட்­டங்­க­ளு­டனும், மெல்கம் 57 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர். நேற்று 4ஆ-வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. ஆட்­டத்தின் முதல் ஓவ­ரி­லேயே சிகந்தர் ரசா சதத்தை தொட்டார். மெல்கம் 68 ஓட்­டங்களுடனும், சிகந்தர் ரசா 127 ஓட்­டங்­க­ளுடனும்  ஆட்­ட­மி­ழந்­தனர். அடுத்து வந்த தலைவர் கிரிமர் 48 ஓட்­டங்கள் எடுக்க சிம்­பாப்வே அணி 2-ஆவது இன்­னிங்ஸில் 377 ஓட்­டங்­களைக் குவித்­தது.

சிம்பாப்வே முதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­ததால் ஒட்­டு­மொத்­த­மாக 387 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­தது. இதனால் இலங்கை அணியின் வெற்­றிக்கு 388 ஓட்டங் கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

இலங்கை அணி சார்பில் ரங்­கன ஹேரத் முதல் இன்­னிங்ஸில் 5 விக்­கெட்­டுக்­க­ளையும், 2ஆவது இன்­னிங்ஸில் 6 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினார். இதன் மூலம் ஒரு போட்­டியில் 10 விக்­கெட்­டுக்கள் வீழ்த்­தியவர்கள் வரி­சையில் நான்­கா­வது இடத்தைப் பிடித்தார் ஹேரத். இவர் 81 போட்­டி­களில் விளை­யாடி 8 முறை 10 விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தி­யுள்ளார். இதில் முத­லி­டத்தில் இலங்­கையின் சுழல் ஜாம்­பவான் முரளிதரன் இருக்­கிறார். இவர் 133 போட்­டி­களில் 22 முறை 10 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார்.

அதன்­பி­றகு 388 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் இலங்கை அணி 2-ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது. 

உபுல் தரங்க மற்றும் திமுத் கரு­ணா­ரத்ன ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கினர். இதில் 27 ஓட்­டங்­க­ளுடன் தரங்க ஆட்­ட­மி­ழக்க,  குசல் மெண்டிஸ் கள­மி­றங்­கினார். மறு­மு­னையில் நின்ற திமுத்தும் 49 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.  அடுத்து வந்த சந்­தி­மாலும் 15 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, மெத்­தியூஸ் கள­மி­றங்­கினார். மெத்­தியூஸ் 17 ஓட்­டங்­க­ளு­டனும், குசல் மெண்டிஸ் 60 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் நிற்க இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 170 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

போட்­டியின் கடைசி நாளான இன்று இலங்கை அணி வெற்­றி­பெற வேண்­டு­மானால் இன்­றைய நாளுக்குள்  7 விக்கெட்டுகள் கையிலுள்ள நிலையில்  218 ஓட்­டங்­களைப் பெற வேண்டும் என்ற நோக்கோடு களமிறங்கிய இலங்கை அணியின் மெத்தியூஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடியபோதும் மெத்தியூஸ் 25 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மிகவும் பொறுப்புடன் ஆடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க அவரும் 81ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிடிகொடுத்து மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

பின்னர் இணைந்த அசேல குணவர்தன மற்றும் டில்ருவான் பெரேரா ஜோடி மிகவும் நிதானமாக ஆடி சிம்பாப்வேயின் வரலாற்று வெற்றிக்கனவை பறித்தெடுக்க இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்று 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி நிம்மதிப்பெருமூச்சு விட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35