நிலோஜன் மகா­லிங்கம், ஹெரல்ட் லஸ்கி அம­ர­சேன, ஜெனி ப்ளெமின் செப­மா­லைப்­பிள்ளை ஆகி­யோரின் திற­மை­யான துடுப்­பாட்ட உத­வி­யுடன் களனி ஸ்ரீ தர்­மா­லோக்க கல்­லூ­ரிக்கு எதி­ரான 19 வய­துக்­குட்­பட்ட இரண்டாம் பிரிவு பாட­சாலை கிரிக்கட் போட்­டியை யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டது.

அம்­பாந்­தோட்டை, மஹிந்த ராஜபக் ஷ சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்­களில் நடை­பெற்ற இப் போட்­டியில் ஸ்ரீ தர்­மா­லோக்க கல்­லூரி முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கட்­க­ளை­யும் இழந்து 387 ஓட்­டங்­களைப் பெற்­றது. இதில் ரிசித் உப்­புமல் 119 ஓட்­டங்க­ளையும் ஹிம­லக்க இது­ரங்க 104 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

பதி­ல­ளித்து துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் முதல் இன்­னிங்ஸில் 198 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

இதில் நிலோஜன் மகா­லிங்கம் (104), ஹெரல்ட் லஸ்கி அம­ர­சேன (43) ஆகிய இரு­வரும் தமது திற­மை­யான துடுப்­பாட்­டத்தின் மூலம் பெரிதும் கைகொ­டுத்­தனர். இவர்கள் இரு­வரும் 8ஆவது விக்­கட்டில் 136 ஓட்­டங்ளைப் பகிர்ந்­தனர்.

இம் மைதா­னத்தில் நிலோஜன் மகா­லிங்கம் பெற்ற சத­மா­னது யாழ். பாட­சாலை மாணவர் ஒரு­வரால் பதிவு செய்­யப்­பட்ட முத­லா­வது சத­மாகும்.

இரண்­டா­வது இன்­னிங்ஸில் தொடர்ந்து துடுப்­பெ­ டுத்­தாட நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி, ஆட்டம் முடி­வுக்கு வந்­த­போது 4 விக்­கட்­களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.